தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜெயித்தவர் நடிகர் விஜய். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கினார். விக்கிரவாண்டி மற்றும் மதுரை ஆகிய 2 இடங்களில் தனது கட்சியின் மாநாடுகளை விஜய் மிகவும் வெற்றிக்கரமாக நடத்தி முடித்தார்.
தொடர்ந்து தவெக சார்பில் நடந்த நிகழ்ச்சிகளிலும் விஜய் பங்கேற்று மக்கள் செல்வாக்தை நிரூபித்தார். விஜய் சென்ற இடம் எல்லாம் மக்கள் கூட்டம் அலை கடலென திரண்ட நிலையில் இந்த தேர்தலில் விஜய் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்து நிற்கிறார். திமுக அதிமுக மாற்றாக தவெக வேண்டும் என்று மக்களும் கூறுவதால் இந்த தேர்தல் அதிக கவனம் பெற்றுள்ளது.
இந்த சூழலில் நடிகர் விஜய் மனைவி சங்கீதா கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்தார். மேலும் நடிகை ஒருவருடன் தனது கணவர் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் சங்கீதா குற்றம் சாட்டியிருந்தாா்.
இது விஜய் ரசிகர்களுக்கும் தவெக கட்சியினருக்கும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஏப்ரல் 20ம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் விஜய் கட்சியினர் திக் திக் மனநிலையில் காணப்பட்டனர்.
இன்று இந்த விசாரணை கோர்ட்டில் வந்த போது நடிகர் விஜய் தரப்பில், காணொளி வாயிலாக கோர்ட்டில் ஆஜராக மனுதாக்கல் செய்து அனுமதி கோரப்பட்டது. அதன்பிறகு வருகிற ஜூன் மாதம் 15ம் தேதி இந்த வழக்கில் விஜய் சங்கீதா இருவரும் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டு வழக்கை ஜூன் 15ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
இந்த விவாகரத்து வழக்கால் ஏதாவது சட்ட சிக்கல் பிரச்னைகள் வந்துவிடுமா? சங்கீதா தரப்பால் இன்னும் பெரிய அளவில் விஜய்க்கு பாதிப்புகள் ஏற்பட்டு விடுமா? என்று தவெக கட்சியினர் கவலைப்பட்ட நிலையில் இந்த வழக்கு ஜூன் 15ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது தளபதி ரசிகர்களுக்கும் தவெக கட்சியினருக்கும் ஒரு விதத்தில் நிம்மதியை தந்துள்ளது. தேர்தல் பணிகளில் குஷியாக ஈடுபட்டு வருகின்றனர்.





