- Advertisement -
Homeபொழுதுபோக்குபெரியார், காமராஜர், அம்பேத்கர் வழியில் தமிழகத்தில் மக்கள் விரும்பும் சமத்துவ ஆட்சி - அரசியல் மாநாட்டில்...

பெரியார், காமராஜர், அம்பேத்கர் வழியில் தமிழகத்தில் மக்கள் விரும்பும் சமத்துவ ஆட்சி – அரசியல் மாநாட்டில் தவெக தலைவர் விஜய் எழுச்சியுரை!

- Advertisement -

விக்கிரவாண்டியில் இன்று மாலை நடந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அரசியல் மாநாட்டில், கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பேசியதாவது, ஒரு குழந்தையை தன் தாயை அம்மா என்று அழைக்கும்போது ஏற்படும் சிலிர்ப்பை அந்த தாயால் சொல்ல முடியாது. அதே குழந்தை சீறி வரும் பாம்பை கண்டும் பயப்படாது. அப்படிப்பட்ட ஒரு மனநிலையில், உங்கள் முன் நான் நிற்கிறேன்.

மக்களுக்கு அடிப்படை தேவை உணவு, நல்ல வேலை, இருப்பிடம் இதை மூன்றும் தர முடியாத ஆட்சி இருந்தால் என்ன, போனால் என்ன. மக்களுக்கு இதை தருவதே எங்களது அடிப்படையான கொள்கையாக இருக்கும். கடவுள் மறுப்பு கொள்கையை தவிர்த்து, பெரியாரின் பெண் கல்வி, பெண் சமத்துவம், பெண் உரிமைகளை மட்டுமே நாம் எடுத்துக்கொள்வோம். அவரது கடவுள் மறுப்பு கொள்கை நமக்கு தேவையில்லை.

- Advertisement -

காமராஜர் நேர்மையான ஆட்சி நிர்வாகம் நடத்தியவர். அவரது வழியில் நிர்வாகத்தை நேர்மையாக நடத்துவோம். அதே போல் அம்பேத்கர் வழியில் மக்களுக்கு சமமான உரிமைகளை வழங்குவோம். வீரமங்கை வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் போன்ற பெண்களை கொள்கை தலைவர்களாக கொண்டு தமிழக அரசியல் தவெக செல்லும். பெண் தலைவர்களை கொள்கை தலைவர்களாக கொண்டிருப்பது தவெக மட்டும்தான்.

நடிக்க வந்த புதிதில் நான் நிறைய அவமானங்களை சந்தித்தேன். முகம் சரியில்லை, நிறம் சரியில்லை என்றெல்லாம் பேசியவர்களை கடந்து உழைப்பால் இந்த உயரத்துக்கு வந்தேன். மக்களாகிய நீங்கள்தான் அதற்கு காரணம். என்னை நன்றாக வாழ வைத்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்.

- Advertisement -

சினிமாவில் உச்சபட்ச உயரத்தில் இருந்தும், என் கேரியரை விட்டுவிட்டு மக்களை மட்டுமே நம்பி நான் வந்திருக்கிறேன். வருகிற 2026ம் ஆண்டில் நடக்கும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் நம்முடன் சேர்ந்து வரும் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவோம்.

என்னை கூத்தாடி, என்ன தெரியும் என்கின்றனர். தமிழ்நாட்டில் எம்ஜிஆரும், ஆந்திராவில் என்டிஆரும் அரசியலுக்கு வந்த போது அப்படிதான் சொன்னார்கள். இப்போதும் அந்த தலைவர்கள் இருவரும் மக்கள் மனதில் வாழ்கின்றனர். அவர்களையே சொன்னவர்கள், என்னை சொல்வதில் தவறு இல்லை. அரசியல் ஊழல்வாதிகளை, கட்சிகளை பெயர் சொல்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை. நாகரிக அரசியல் செய்ய வந்திருப்பதால் அதுபோன்று பேசுவதில் விருப்பம் இல்லை, என்று விஜய் பேசினார்.

- Advertisement -

சற்று முன்