- Advertisement -
Homeபொழுதுபோக்குஓடிடியில் நான் கூலி படம் பார்த்தேன்… - தனது விமர்சனத்தை பகிரங்கமாக முன்வைத்த ...

ஓடிடியில் நான் கூலி படம் பார்த்தேன்… – தனது விமர்சனத்தை பகிரங்கமாக முன்வைத்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்!

- Advertisement -

மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் இயக்குனராக வந்தவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்தார். தொடர்ந்து கைதி விக்ரம் மாஸ்டர் லியோ போன்ற படங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்தார். இதில் கைதி மற்றும் விக்ரம் படங்கள் பெரிய அளவில் பிளாக்பஸ்டர் படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.

ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ படம் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது. குறிப்பாக இந்த படத்தில் இரட்டை பிறவி நரபலி ஜோதிட நம்பிக்கை போன்ற விஷயங்களை கொண்டு வந்ததால் 2023ம் ஆண்டில் இப்படி ஒரு மூட நம்பிக்கை படமா என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

- Advertisement -

இதன்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் வெளியானது. இந்த படமும் மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் எலக்ட்ரிக் சேரில் சடலங்களை எரிப்பது, கேமியோ ரோலில் வந்த அமீர்கான் உபேந்திரா நாகர்ஜூனா கேரக்டர்கள் குறித்து ரசிகர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி ஏற்பட்டது.

நடிகர் ரஜினிகாந்த் கேரக்டர் குறித்தும் பலவிதமான விமர்சனங்கள் இந்த படத்தில் எழுந்தது. குறிப்பாக பல ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தில் சத்யராஜ் ரஜினியுடன் இணைந்து நடித்த நிலையில், அவரது கேரக்டரும் சரியான முறையில் உருவாக்கப்படாமல் ஏனோதானோ என இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிப்பில் கவனிக்கப்பட்ட ஒரே கேரக்டர் மலையாள நடிகர் சௌபின் சாஹிர் மட்டும்தான்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது, கூலி படம் நன்றாக இல்லை என்ற கருத்து அதிகமாக வந்தது. ஓடிடியில் வந்த பின்புதான் நான் கூலி படம் பார்த்தேன். என்னை பொறுத்தவரை ஒரு படத்தை முழுவதுமாக ஒரே அமர்வில் பார்க்க முடிகிறதா என்று பார்ப்பேன்.

என்னால் கூலி படத்தை ஒரே அமர்வில் பார்க்க முடிந்தது, படத்தைப் பார்த்து முடித்தபின் ஒரே ஒரு கேள்விதான் என்னை நானே கேட்டுக் கொண்டேன். இணையத்தில் வரும் விஷயங்களை அப்படியே நான் ஏற்றுக்கொள்ள பழகி விட்டேனா? ஒரு விமர்சகனாக அந்த படத்தில் 10 குறைகள் கூட கண்டுபிடிக்கலாம். ஆனால் இவர்கள் சொன்ன அளவுக்கு அந்த படம் அவ்வளவு மோசம் இல்லை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்