- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதுகில் வழியும் ரத்தம்... தெம்பாக நிற்கும் தனுஷ்... வந்தாச்சு 50 பட அறிவிப்பு... ஏதே அப்போதான்...

முதுகில் வழியும் ரத்தம்… தெம்பாக நிற்கும் தனுஷ்… வந்தாச்சு 50 பட அறிவிப்பு… ஏதே அப்போதான் ரிலீஸ் ஆவுதா…

- Advertisement -

நடிகர் தனுஷிற்கு கடந்த ஆண்டு வாத்தி திரைப்படம் மட்டும் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியிருந்த இந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து, கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்தார் தனுஷ். அருண் மாதேஸ்வரன் இயக்கிய இந்த திரைப்படம், பொங்கல் பண்டிகையின் போது வெளியாகி வரவேற்பை பெற்றது.

இப்படியான சூழலில் தற்போது, தனது ஐம்பதாவது திரைப்படத்தை இயக்கி நடித்து இருக்கிறார் தனுஷ். வடசென்னையின் பின்புலத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தில், செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, நித்யா மேனன், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பால முரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

- Advertisement -

ஜூலை மாதத்தில் தொடங்கிய இதன் படபிடிப்பை, ஒரே கட்டமாக நடத்தி முடித்து பலரையும் ஆச்சரியப்பட வைத்தார் இயக்குனர் தனுஷ். இதற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், பிரம்மாண்ட செட் போட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. எஞ்சிய படப்பிடிப்பை காரைக்குடி பகுதியில் அவர் நடத்தினார்.

தனுஷின் ஐம்பதாவது திரைப்படமாக இது உருவாகி இருப்பதால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் படம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் உள்ளது. வடசென்னை கதைக்களம் தான் என்றாலும், அதை எவ்வாறு தனுஷ் இயக்கி இருப்பார் என்று ஆர்வம் எழுந்துள்ளது. ஏற்கனவே தனது இயக்கத்தில் பவர் பாண்டி திரைப்படத்தை மிக அருமையாக கையாண்டிருப்பார் தனுஷ்.

- Advertisement -

இந்த நிலையில் தனது ஐம்பதாவது திரைப்படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக ஒரு காதல் திரைப்படத்தை தனுஷ் இயக்கி இருக்கிறார். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்னும் தலைப்பில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இளம் நடிகர்கள் நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தின் சூட்டிங் இரண்டே மாதங்களில் முடிக்கப்பட்டது.

இப்படியான சூழலில் தற்போது தனது 51 வது திரைப்படத்தில் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார். அதனை தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க அவரின் ஐம்பதாவது திரைப்படம் குறித்த அறிவிப்பு 19 ஆம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேசமயம், இந்த திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்