- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தில் நான் செய்தது தவறுதான், உண்மையை பகிரங்கமாக ஒத்துக்கொண்ட இயக்குனர் மணிரத்னம் - அந்த...

அந்த படத்தில் நான் செய்தது தவறுதான், உண்மையை பகிரங்கமாக ஒத்துக்கொண்ட இயக்குனர் மணிரத்னம் – அந்த பெரியவர் சொன்னதை அவர் செய்யலையே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கிய பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கின்றன. குறிப்பாக தளபதி, நாயகன், மௌனராகம், பகல் நிலவு, கீதாஞ்சலி, பம்பாய், ரோஜா, ராவணன், பொன்னியின் செல்வன் என பல படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் மோகன், ரேவதி நடித்த படம் மௌனராகம். இதில் கேமியோ ரோலில் நடிகர் கார்த்தி, ரேவதியின் காதலராக நடித்திருப்பார். கடந்த 1986ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படம் வெளியானது. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். விகே ராமசாமி, இரா. சங்கரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் நாயகி ரேவதி, தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாத நிலையில் நாயகன் மோகனை திருமணம் செய்துக்கொள்வார். ஆனால் மோகனுடன் இணங்கி வாழாமல் பிரிந்திருப்பார். ஒரே வீட்டில் இருவரும் பிரிந்து வாழும் நிலையில், ஒரு கட்டத்தில் ரேவதி விவாகரத்து கேட்டு மோகனை பிரிந்து போக விரும்புவார்.

ரேவதியின் பிளாஷ்பேக்கில் நடிகர் கார்த்தி, ரேவதியை துரத்தி துரத்தி காதலிப்பார். ஒரு கட்டத்தில் ரேவதியும் ஒரு கட்டத்தில் கார்த்தியின் காதலை ஏற்றுக்கொள்வார். இருவரும் பதிவு திருமணம் செய்துக்கொள்ள திட்டமிட்ட நேரத்தில், போலீசார் குற்றவாளியை சுடுவதற்கு பதிலாக கார்த்திக்கை சுட்டு அவர் இறந்துவிடுவார்.

இந்த படத்தின் கதைப்படி, மோகன் ரேவதியின் வெறுப்பை, அதிருப்தியை, தன்மீது அவருக்கு காதல் உணர்வு இல்லை என்பதை உணர்ந்து விலகியே நடிப்பார். இந்த படம் வெளியான போது, சென்னையை விட்டு தூரத்தில் இருந்த ஒரு தியேட்டரில் இயக்குனர் மணிரத்னம் மௌனராகம் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்திருக்கிறார்.

அப்போது படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பெரியவர் ஒருவர், பொண்டாட்டியை நாலு சாத்து சாத்தினா, அவ தானா வழிக்கு வரப்போறா. அதைவிட்டுட்டு இப்படி ஒரு கதாநாயகன், கெஞ்சிக்கிட்டு இருப்பானா, என்று விமர்சித்துவிட்டு போயிருக்கிறார். இதைக்கேட்டு மணிரத்னம் அதிர்ந்து போயிருக்கிறார். படத்தில் ரேவதியை, மோகன் அடிப்பது போல் ஒரு காட்சியை வைத்து பிரச்னைக்கு அது தீர்வல்ல என்று காட்டாதது நான் செய்த பெரிய தவறு, என்று பிறகு ஒரு நேர்காணலில் மணிரத்னம் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்