- Advertisement -
Homeபொழுதுபோக்குஹீரோவாக ஜெயிப்பாரா இயக்குனர் லோகேஷ் கனகராஜ்? - டிசி திரைப்படம் ரிலீஸ் தேதி அறவிச்சாச்சு -...

ஹீரோவாக ஜெயிப்பாரா இயக்குனர் லோகேஷ் கனகராஜ்? – டிசி திரைப்படம் ரிலீஸ் தேதி அறவிச்சாச்சு – எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் தமிழ் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று தந்தது. எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணி புரியாமல் கல்லூரியில் படித்த போது குறும்படங்கள் இயக்கிய அனுபவங்களைக் கொண்டு அவர் இயக்குனராக களத்தில் இறங்கி இயக்கிய படம்தான் மாநகரம். முதல் படமே மிகவும் அற்புதமான ஒரு படைப்பாக வெளிவந்தது.

தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த கைதி படமும் பிளாக்பஸ்டர் வெற்றி, அதேபோல் நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படமும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இது கமல்ஹாசனுக்கும் ஒரு சூப்பர் கம்பேக் கொடுத்தது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய படங்களை இயக்கினார்.

- Advertisement -

ஆனால் லியோ படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. லியோ படத்தின் கதை திரைக்கதையில் கேரக்டர்களில் லோகேஷ் கனகராஜ் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. எனினும் வணிக ரீதியாக லியோ படம் வெற்றி படம்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.

இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டளாமே இருந்தும் இதுவரை ரஜினிகாந்த் நடித்த படங்களில் கூலி படம் போல ஒரு மொக்கையான படம் எதுவும் இல்லை என்று சொல்கிற அளவுக்கு இந்த படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது. எனினும் இந்தப் படமும் வணிக ரீதியான வெற்றி படமாக இருந்தது. ரஜினி நடித்த கூலி படத்துக்கு பிறகு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனனை வைத்து ஒரு படத்தை இயக்க அதற்கான பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.

- Advertisement -

அதற்கு முன்பாக லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக களம் இறங்கிய படம் டிசி. இந்த படத்தில் நாயகியாக வாமிகா கபி நடித்துள்ளார். அருண் மாதேஸ்வரன் டைரக்ட் செய்திருக்கிறார் அதிரடி ஆக்சன் படமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியானது. இப்போது டிசி படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வரும் சூழலில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி இம்மாத இறுதியில் 31ம் தேதி டிசி படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ளது. இயக்குனராக ரசிகர்களின் மனம் கவர்ந்த லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக வெற்றி பெறுவாரா? கேப்டன் மில்லர் சாணிக்காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரனுக்கு டிசி படம் ஒரு வெற்றி படமாக அமையுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்