- Advertisement -
Homeபொழுதுபோக்குமாமன் படத்தை வசூலில் முந்தியதா சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் - சூரியை...

மாமன் படத்தை வசூலில் முந்தியதா சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் – சூரியை ஜெயித்தாரா நடிகர் சந்தானம்? – 4 நாட்களில் வசூல் நிலவரம்!

- Advertisement -

நடிகர் சூரி நடிப்பில் கடந்த 16ம் தேதி வெளியான படம் மாமன். பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் கதாநாயகனாக சூரி நடித்துள்ள மாமன் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்துள்ளார். லப்பர் பந்து பட நடிகை சுவாசிகா சூரிக்கு அக்கா கேரக்டரில் நடித்திருக்கிறார். நடிகர் ராஜ்கிரண் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் தன் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

விடுதலை கருடன் படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் சூரி நடித்த விடுதலை 2 கொட்டுக்காளி படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மாமன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனமும் தொடர்ந்து வரவேற்பும் கிடைத்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மாமன் படம் ரூ. 12 கோடி வசூலை கடந்திருக்கிறது.

- Advertisement -

தனக்கு நாயகன் அந்தஸ்து ரசிகர்கள் மத்தியில் கிடைத்து விட்ட நிலையில் இனி கதாநாயகனாக தான் சினிமாவில் என் பயணம் என்பதில் நடிகர் சூரி உறுதியாக இருக்கிறார். இப்போது மண்டாடி என்ற படத்தில் சூரி நடித்துவரும் நிலையில் நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகை மஹிமா நம்பியார் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.

நடிகர் சூரி நடித்த மாமன் படம் வெளியான அதே நாளில் கடந்த 16ம் தேதி நடிகர் சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படமும் வெளியானது. இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கிய இந்த படத்தில் சந்தானம் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. அரை மாவை தான் மீண்டும் அரைத்து வைத்திருக்கின்றனர். படத்தில் சுவாரசியமே இல்லை என்பது படம் பார்த்தவர்களின் விமர்சனமாக உள்ளது.

- Advertisement -

ரசிகர்களை பொருத்த வரை பல ஆண்டுகளுக்கு முன்பு ரசித்த ஒரு படத்தை இப்போதும் ரசிப்பார்களா என்பதை உறுதிப்படுத்த முடியாது. அதே போல் பல ஆண்டுகளுக்கு முன் வெளியான ஒரு படம் தியேட்டரில் தோல்வியடைந்த போதும் டிவியில் அந்த படத்துக்கு பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து விடுகிறது. அதனால் பழைய மாவில் சுட்ட தோசையாக டிடி நெக்ஸ்ட் லெவல் படம் ரசிகர்களுக்கு திருப்தியான ருசியை தரவில்லை.

இந்நிலையில் கடந்த 4 நாட்களில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் மொத்தமாக உலகளவில் ரூ. 10 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது. மேலும் இந்த படம் ஓடும் தியேட்டர்களில் சரியான கூட்டமும் இல்லை. ரசிகர்கள் வருகையின்றி தியேட்டர் காற்று வாங்குகிறது. ஆனால் மாமன் படம் 4 நாட்களில் ரூ. 12 கோடி வசூலித்து முந்தியிருக்கிறது. மாமன் படத்தின் மூலம் நடிகர் சூரி வசூலில் நடிகர் சந்தானத்தை முந்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்