- Advertisement -
Homeபொழுதுபோக்குடிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியாவதில் திடீர் சிக்கல் - தயாரிப்பு நிறுவனம் ...

டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியாவதில் திடீர் சிக்கல் – தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு – நடிகர் ஆர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்ப கோர்ட் உத்தரவு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் துவக்கத்தில் காமெடி நடிகராக இருந்து பிறகு கதாநாயகனாக மாறியவர் நடிகர் சந்தானம். அவர் நாயகனாக நடித்த பல படங்கள் பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. அதே நேரத்தில் நடிகர் ஆர்யாவும் சந்தானமும் மிகவும் நெருக்கமான நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டில் வெளியான தில்லுக்கு துட்டு படம் பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து 2019ம் ஆண்டில் தில்லுக்கு துட்டு 2ம் பாகமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படங்களை ஆர்கே என்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது.

- Advertisement -

இப்போது தில்லுக்கு துட்டு படத்தின் 3ம் பாகமாக டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டு வரும் 16ம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திலும் நாயகனாக சந்தானம் நடித்திருக்கிறார். இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை நடிகர் ஆர்யாவின் சொந்த நிறுவனம் தி ஷோ பீப்பிள் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்துக்கு தடை விதிக்க கோரி ஆர்கே என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்த மனுவில், டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் தலைப்பு இதற்கு முன்பு எங்கள் நிறுவனம் தயாரித்த தில்லுக்கு துட்டு திரைப்படங்களின் தொடர்ச்சியாக உள்ளது.

- Advertisement -

எங்களிடம் முறையாக அனுமதி பெறாமல் இந்த தலைப்பை பயன்படுத்தி உள்ளனர். இது காப்புரிமை சட்டத்தை மீறிய செயலாகும். எனவே டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், மனுவுக்கு பதில் அளிக்கும்படி படத்தின் தயாரிப்பாளர் நடிகர் ஆர்யா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு குறித்த விசாரணை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வரும் 16ம் தேதி வெளிவருவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்