- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யாவுடன் மோத தயாரான நடிகர் சந்தானம், டிடி நெக்ஸ்ட் லெவல் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூர்யாவுடன் மோத தயாரான நடிகர் சந்தானம், டிடி நெக்ஸ்ட் லெவல் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

- Advertisement -

விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற காமெடி நிகழ்ச்சியில் சினிமா படங்களை கிண்டலடித்து நடிகர்களின் கேரக்டரில் நடித்து காமெடி செய்தவர் சந்தானம். அவருக்கு மன்மதன் வல்லவன் என தனது படங்களில் காமெடி ரோல்களில் நடிக்க வாய்ப்பளித்தார் நடிகர் சிலம்பரசன். சந்தானம் காமெடி நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு அமைந்து, முன்னணி காமெடி நடிகராக ஒரு கட்டத்தில் மாறினார். நடிகர்கள் ஆர்யா, உதயநிதி ஸ்டாலின், ஜீவா போன்றவர்களுடன் இரட்டை நாயகர்களில் ஒருவராக சந்தானம் நடித்தார்.

- Advertisement -

அதன்பிறகு காமெடி நடிப்பில் இருந்து ஹீரோவாக மாறிய சந்தானம் தொடர்ந்து ஹீரோவாகவும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஏ ஒன் சபாபதி வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்களில் நடித்த சந்தானம் தில்லுக்கு துட்டு டிடி ரிடர்ன்ஸ் என்ற திகில் படங்களிலும் நடித்தார். இந்த படங்கள் பெரிய வெற்றியை பெற்றது.

இந்நிலையில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் டிடி நெக்ஸ்ட் லெவல். கடந்த 2016ம் ஆண்டில் சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு படத்தின் 2ம் பாகமாக 2019ம் ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்றது. அடுத்து 2023ம் ஆண்டில் டிடி ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகி வெற்றி பெற்றது. இது நடிகர் சந்தானத்தின் 125வது படமாக இருந்தது. இப்போது தொடர்ந்து டிடி நெக்ஸ்ட் லெவல் படம் உருவாகியுள்ளது.

- Advertisement -

இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் கௌதம் மேனன் செல்வராகவன் மொட்டை ராஜேந்திரன் யாஷிகா கஸ்தூரி கீர்த்திகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை புகைப்படம் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து வருகிற மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று இந்த படம் திரைக்கு வர உள்ளது. அதே நாளில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படமும் ரிலீஸ் ஆக உள்ளது. வருகிற மே 1ம் தேதி சூர்யா, சந்தானம் நடித்த படங்கள் களத்தில் மோதுகின்றன.

- Advertisement -

சற்று முன்