- Advertisement -
Homeபொழுதுபோக்குபொதுத்தேர்தலை விட இடைத்தேர்தலில் குறைந்துபோன வாக்குப்பதிவு சதவீதம் - மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் விஜய் கட்சி...

பொதுத்தேர்தலை விட இடைத்தேர்தலில் குறைந்துபோன வாக்குப்பதிவு சதவீதம் – மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் விஜய் கட்சி ஜெயிக்குமா?

- Advertisement -

இப்போது தமிழ்நாடே மிக கவனமாக எதிர்பார்த்திருக்கும் ஒரு விஷயம் தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளில் நடந்துள்ள இடைத்தேர்தல் தான். ஏனெனில் புதிதாக ஆட்சிக்கு வந்த தவெக கட்சிக்கு இந்த இடைத்தேர்தல் முடிவுதான், அவர்களின் ஆணவப்போக்குக்கு சம்மட்டி அடியாக இருக்கும் என்று அதிமுக – திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறி வருகின்றன.

ஏனெனில் இந்த தொகுதிகளில் ஏற்கனவே பொதுத்தேர்தல் அதிமுக வேட்பாளர்களாக போட்டியிட்டு எம்எல்ஏவாக ஜெயித்தவர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா. இவர்களும் 2 பேரும் தங்களது அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக பக்கம் போய்விட்ட நிலையில், இப்போது அந்த 2 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்துள்ளது.

- Advertisement -

இதே தொகுதிகளில் பழைய எம்எல்ஏக்களாக இருந்தவர்களே தவெக வேட்பாளர்களாக களத்தில் நின்ற நிலையில் இன்று ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதில் கடந்த தேர்தலை காட்டிலும் இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது தவெக வேட்பாளர்களுக்கு சாதகமா, பாதகமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த பொதுத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,13,788 பேரில் 93.2 சதவீதம் பேர் வாக்களித்தனர். இந்த முறை இடைத்தேர்தலில் இன்று 85.99 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர். அதன்படி 7.3 சதவீதம் வரை வாக்குப்பதிவு இந்த இடைத்தேர்தலில் குறைந்துள்ளது

- Advertisement -

அதே போல் தாராபுரம் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,23,306 பேரில் 89.9 சதவீதம் பேர் கடந்த பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு செய்திருந்தனர். ஆனால் இன்று நடந்த இடைத்தேர்தலில் இந்த தொகுதியில் 80.31 சதவீதம் பேர் மட்டுமே வாக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இதன்படி 9 சதவீதம் வரை வாக்குப்பதிவு இன்று குறைந்து போயுள்ளது.

வழக்கமாக இடைத்தேர்தல் என்றாலே அந்த தொகுதி மக்களுக்கு ஜாக்பாட் தான். இந்த முறை தவெக தரப்பில் டிபன்பாக்ஸில் வைத்து ரூ. 10 ஆயிரம் வரை பணம் தரப்பட்டதாகவும் வெள்ளி காமாட்சி விளக்கு பட்டுப்புடவை எல்லாம் வழங்கப்பட்டதாக மற்ற அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பின. இதற்கிடையே வாக்குப்பதிவு பொதுத்தேர்தலை விட இடைத்தேர்தலில் குறைந்திருப்பது ஆளுங்கட்சிக்கு சாதகமா, பாதகமா என்பதற்கு வரும் 9ம் தேதி பதில் கிடைத்து விடும்.

- Advertisement -

சற்று முன்