- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த படமெல்லாம் எப்படி ஓடும்ன்னு நினைச்சேன், ஆனா அப்ரம் நடந்ததுதான்- அஜித், விஜய் படங்களுக்கு தப்பு...

இந்த படமெல்லாம் எப்படி ஓடும்ன்னு நினைச்சேன், ஆனா அப்ரம் நடந்ததுதான்- அஜித், விஜய் படங்களுக்கு தப்பு கணக்குப் போட்ட தேவா

- Advertisement -

இசையமைப்பாளர் தேவா, ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பல டாப் நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். “பாட்ஷா”, “அண்ணாமலை”, “அவ்வை சண்முகி”, “குஷி”, “வாலி” போன்ற பல திரைப்படங்களை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.

சமீப காலமாக அவர் எந்த திரைப்படங்களுக்கும் இசையமைக்கவில்லை. ஆனால் பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார் தேவா. இந்த நிலையில் சமீபத்தில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியின் பேட்டியில் கலந்துகொண்டார் தேவா.

- Advertisement -

அப்போது சித்ரா லட்சுமணன், “பின்னணி இசை சேர்ப்பிற்கு முன்பு நீங்கள் முழு படத்தையும் பார்க்கிறீர்களே, அப்போ இந்த படம் வெற்றிபெறும் அல்லது பெறாது என்று உங்களால் கணிக்க முடியுமா?” என கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த தேவா, “சில படங்கள் எல்லாம் என்ன இவ்வளவு ஸ்லோவா இருக்கே என தோன்றும். குஷி படத்தில் கூட இன்டெர்வெல்க்கு பின் கிளைமேக்ஸ் காட்சிகள் மிகவும் ஸ்லோவாக இருப்பதாக தோன்றியது.

- Advertisement -

இதனை நான் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிடம் கூறினேன். ஆனால் அவர் ‘இல்லை சார், அது சரியாக வரும். பெர்ஃபெக்ட்டாக இருக்கும்’ என கூறினார். அவர் சொன்னது போலவே அத்திரைப்படம் பயங்கரமான வெற்றியை பெற்றது.

அஜித்தின் காதல் கோட்டை படத்தையே கூட என்னால் கணிக்க முடியவில்லை. அந்த படத்தில் இருவரும் பார்க்காமலே காதலிப்பார்கள். இது சரிவராது என்று நினைத்தேன். ஆனால் கிளைமேக்ஸில் அஜித் அணிந்திருந்த தாமரைப்பூ சட்டையை காட்டியவுடன் ஆடியன்ஸ்கள் கைத்தட்டினார்கள் பாருங்கள். பார்வையாளர்கள் எழுந்து நின்று கைத்தட்டினார்கள்” என தான் தவறாக கணக்குப் போட்டுவிட்டதை கூறியிருந்தார்.

ஆனால் “குஷி”, “காதல் கோட்டை” ஆகிய திரைப்படங்கள் விஜய், அஜித் ஆகியோரின் கெரியரில் திருப்புமுனை வாய்ந்த திரைப்படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்