- Advertisement -
Homeபொழுதுபோக்குஎல்லா நடிகர்களுடனும் நடிச்சிருக்கேன்… ஆனா அந்த ஒரு நடிகர் கூட மட்டும் நடிக்க முடியலே …...

எல்லா நடிகர்களுடனும் நடிச்சிருக்கேன்… ஆனா அந்த ஒரு நடிகர் கூட மட்டும் நடிக்க முடியலே … அதற்கான காரணம் குறித்து பேசிய நடிகை தேவயானி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. ஹோம்லியான கேரக்டர் என்றால் அதில் தேவயானியை விட பொருத்தமான நடிகை அந்த காலகட்டத்தில் யாரும் இருக்க முடியாது. பாடல் காட்சிகளில் கூட கவர்ச்சி ஆபாசம் இல்லாமல் நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை தேவயானி.

அவர் நடித்த காதல் கோட்டை தெனாலி ஆனந்தம் மறுமலர்ச்சி நினைத்தேன் வந்தாய் பிரண்ட்ஸ் தொடரும் கும்மிப்பாட்டு சூரியவம்சம் மூவேந்தர் பாட்டாளி நீ வருவாய் என பல படங்களில் தேவயானி நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இயக்குனர் இராஜகுமாரனை காதல் மணம் புரிந்த தேவயானிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

- Advertisement -

தேவயானி திரைப்படங்களில் மட்டுமின்றி கோலங்கள் உள்ளிட்ட சில டிவி சீரியல்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுக்கு தேவயானி ஜோடியாக நடித்திருக்கிறார். இப்போது நல்ல கேரக்டர்களைே தேர்வு செய்து அவர் நடித்து வருகிறார்.

எந்த ஹீரோவுக்கு ஜோடியாக நடித்தாலும் அவருக்கு நல்ல பொருத்தமான நாயகியாக தேவயானி பல படங்களில் இருந்திருக்கிறார். தமிழில் விஜயகாந்த் சத்யராஜ் சரத்குமார் பிரபு கார்த்திக் முரளி விஜய் அஜீத்குமார் என பல ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த தேவயானி, ரஜினியுடனோ அல்லது ரஜினி நடித்த படத்திலோ இதுவரை நடித்ததே இல்லை.

- Advertisement -

கமல்ஹாசன் நடித்த தெனாலி பஞ்சதந்திரம் படங்களில் கமலுக்கு ஜோடியாக இல்லாவிட்டாலும் அவருடன் பல காட்சிகளில் நடித்திருக்கிறார். அதே போல் தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர் மட்டுமின்றி ஜூனியர் நடிகர்களுடன் பல படங்களில் நடித்த நடிகை தேவயானி ரஜினி படங்களில் நடித்தது இல்லை. இவருடன் முன்னணி நாயகியாக இருந்த ரம்பா சிம்ரன் போன்றவர்கள் கூட ரஜினியுடன் நடித்து விட்டனர்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை தேவயானி கூறியதாவது, நான் இதுவரை ரஜினி சாருடன் நடிக்கவில்லை. அப்படி ஒரு வாய்ப்பே எனக்கு இதுவரை வரவில்லை. அந்த மாதிரி கதை எதுவும் எனக்கு நடிக்க சொல்லலே. ரஜினியுடன் நடிப்பதற்கான புராஜெக்ட் எதுவும் எனக்கு அமையலே. மத்தபடி கிட்டத்தட்ட எல்லா நடிகர்களுடனும் நான் நடித்திருக்கிறேன் என்று நடிகை தேவயானி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்