- Advertisement -
Homeபொழுதுபோக்குஅம்மன் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல இசையமைப்பாளர்… அட இவரா என ஆச்சரியத்தில் வாய் பிளந்த...

அம்மன் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல இசையமைப்பாளர்… அட இவரா என ஆச்சரியத்தில் வாய் பிளந்த ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் எப்போது யார் ஹீரோவாக மாறுவார்கள் என்பதை கணிக்கவே முடியாது. திடீர் திடீர் என பலர் ஹீரோக்களாக திரைக்கு வந்து விடுகின்றனர். அப்படி காமெடி நடிகர்கள் ஹீரோ ஆகின்றனர். இசையமைப்பாளர்கள் ஹீரோ ஆகின்றனர். தயாரிப்பாளர்கள் ஹீரோ ஆகின்றனர். இயக்குனர்கள் ஹீரோ ஆகின்றனர்.

அதிலும் பெரும்பாலும் சினிமா நடிகர் நடிகைகளின் வாரிசுகள், இயக்குனர்களின் வாரிசுகள் ஹீரோ ஹீரோயின் ஆகின்றனர். அரசியல் வாரிசுகளை போல திரையுலக வாரிசுகளும் சினிமாவில் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர். நடிப்புக்கு வராவிட்டாலும் இயக்குனராக மாறுபவர்களும் இருக்கின்றனர்.

- Advertisement -

இந்த வரிசையில் இசையமைப்பாளர்களாக தமிழ் சினிமாவுக்குள் வந்த விஜய் ஆண்டனி ஜீவி பிரகாஷ்குமார் இருவரும் இப்போது ஹீரோக்களாக பல படங்களில் நடித்து விட்டனர். தொடர்ந்தும் பல படங்களில் நடித்து வருகின்றனர். இதுதவிர இசையமைக்கவும் செய்கின்றனர். சமீபத்தில் மூன்வாக் என்ற படத்தில் இசைப்புயல் ஏஆர் ரகுமானும் நடிகர் பிரபுதேவாவும் இணைந்து நடித்திருக்கின்றனர்.

எம்எஸ் விஸ்வநாதன் கங்கை அமரன் போன்றவர்களும் படங்களில் நடித்திருக்கின்றனர். இப்போது அந்த வரிசையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். டிஎஸ்பி என அழைக்கப்படும் இவர்தான் மேடைகளில் மைக் பிடித்து பாடி டான்ஸ் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதற்கு பிறகுதான் அனிருத் போன்றவர்கள் மேடையில் நடனமாடி பாட்டு பாடி வருகின்றனர். அதனால் டிஎஸ்பிதான் இவர்களுக்கு எல்லாம் முன்னோடி என்று சொல்லலாம். தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக உள்ள தில் ராஜூ தயாரிக்கும் ஒரு படத்தில் டிஎஸ்பி நாயகனாக அறிமுகமாகிறார். இந்த படம் இசை சம்பந்தப்பட்டது அல்ல. முழுக்க முழுக்க அம்மன் சாமியை மையப்படுத்திய கதைக்களத்தில் உருவாகிறது.

பக்தி படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் நாயகனாக அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவில் இசையில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். பல நூற்றுக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களை தந்தனர். ஒரு நல்ல ஹீரோவாகவும் திரையில் டிஎஸ்பி தன்னை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே தயாரிப்பாளர் தாணு தயாரிக்கும் ஒரு படத்தில் டிஎஸ்பி நாயகனாக நடிப்பதாக இருந்தது. ஆனால் அது இப்போதுதான் தயாரிப்பாளர் தில்ராஜூ மூலம் நிறைவேறி உள்ளது.

- Advertisement -

சற்று முன்