- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்க்கு எதிரான களத்தில் குதிக்கும் தனுஷ், தனுஷூக்கு எதிராக களத்தில் குதிக்க தயாரான எஸ்கே -...

விஜய்க்கு எதிரான களத்தில் குதிக்கும் தனுஷ், தனுஷூக்கு எதிராக களத்தில் குதிக்க தயாரான எஸ்கே – விஜய் கெத்து போனா, இவங்க மாஸ் காட்டி யூஸ் இல்லே!

- Advertisement -

விஜய் டிவியில் அது இது எது என்ற காமெடி ஷோவில் காம்ஃபியராக இருந்த சிவகார்த்திகேயன் சினிமாவுக்குள் நடிகராக வந்த போது அவருக்கு பல உதவிகளை செய்தவர் நடிகர் தனுஷ். தன்னுடைய 3 என்ற படத்தில் சிவகார்த்திகேயனை தனது நண்பனாக நடிக்க வைத்தார்.

சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் நடித்த சில படங்களை நடிகர் தனுஷ் சொந்தமாக தயாரித்தது மட்டுமின்றி எதிர்நீச்சல் என்ற படத்தில் ஒரு சிறப்பு நடனமும் ஆடிக்கொடுத்தார். சத்தியமா நீ எனக்கு தேவையே இல்லே 10 நாளா சரக்கு அடிச்சும் போதையே இல்லே என்ற அந்த பாடலில் தனுஷ் உடன் நடிகை நயன்தாராவும் நடனம் ஆடியிருப்பார்.

- Advertisement -

ஆனால் தனுஷ் – எஸ்கே நட்பில் ஒரு கட்டத்தில் விரிசல் ஏற்பட்டு மறைமுக போர் உருவானது. ஏனென்றால் தனுஷ் ரசிகர்கள் எல்லாம் ஒரு சமயத்தில் எஸ்கே ரசிகர்களாக மாற துவங்கி விட்டனர். அதனால் தனுஷ் – எஸ்கே இடையே பல ஆண்டுகளாக ஒரு பனிப்போர் இருந்து வருகிறது. இது சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெடிக்கவும் செய்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் விஜய் முதல்வரான நிலையில் நடிகர் தனுஷ் அரசியல் களத்தில் இறங்க தயாராகி விட்டார். வருகிற 2031 சட்டசபை தேர்தலில் தவெகவுககு எதிராக தனுஷ் கோதாவில் குதிக்க உள்ளார். அடுத்து 2036ம் ஆண்டில் தனுஷூக்கு எதிரான தேர்தல் களத்தில் சிவகார்த்திகேயன் குதிக்க ஆயத்தமாகி வருகிறார்.

- Advertisement -

இவர்களை போலவே நடிகர்கள் சூர்யா விஜய் சேதுபதி சிம்பு போன்றவர்களும் எதிர்காலத்தில் அரசியல் களத்தில் குதிக்கும் திட்டத்தில் தங்களது ரசிகர் மன்றங்களை வலுப்படுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு முக்கிய காரணம் நடிகராக இருந்த விஜய் அரசியல் களத்தில் குதித்து கட்சி துவங்கிய 2 ஆண்டுகளில் முதல்வர் சீட்டில் அமர்ந்ததுதான் இந்த ஹீரோக்களுக்கு பெரிய நம்பிக்கையை தந்துள்ளது.

ஆனால் ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் விஜய்க்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பும் கண்டனமும் கிளம்பியுள்ளது. ஒருவேளை விஜய் வரும் 2031க்குள் நல்லாட்சி தந்து மக்களை கவர்ந்து விட்டால் அடுத்த முறை விசிலுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும். இல்லாவிட்டால், விசில் சத்தம் வராது. அதே நேரத்தில் நடிகர்கள் கையில் நாட்டை கொடுத்தால் சின்னாபின்னமாக்கி விடுவார்கள் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு வந்து விட்டால் அடுத்து சினிமாவில் இருந்து அரசியலுக்கு யார் வந்தாலும் அவர்களை மக்கள் மதிக்க மாட்டார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

- Advertisement -

சற்று முன்