தனுஷ் தற்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரித்து வருகிறார். இத்திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார். மேலும் சந்தீப் கிசான், நிவேதிதா சதீஷ் உட்பட பலரும் இத்திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் தனது 50 ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க தனுஷே இத்திரைப்படத்தை இயக்கவுள்ளார். “பா பாண்டி” திரைப்படத்திற்கு பிறகு “D 50” திரைப்படத்தை தனுஷ் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் “D 50’ திரைப்படத்தை குறித்து பல மாஸ் தகவல்கள் வரிசையாக வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படம் அண்ணன், தங்கை, தம்பி சென்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாகவுள்ளதாம். இதில் தனுஷிற்கு அண்ணனாக எஸ்.ஜே.சூர்யாவும், தம்பியாக சந்திப் கிசானும் நடிக்கிறார்களாம். அதே போல் தனுஷிற்கு தங்கையாக துஷாரா விஜயன் நடிக்கவுள்ளாராம்.

மேலும் “D 50” திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளாராம். அதே போல் ஜெயராமின் மகனான காளிதாஸ் ஜெயராம் இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்திரைப்படத்தை குறித்து இன்னும் கூடுதலாக சில தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது வருகிற ஜூலை மாதம் சென்னையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், இத்திரைப்படத்தில் தனுஷ் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார் எனவும் கூறப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை 90 நாட்களில் ஒரே கட்டமாக முடிக்க தனுஷ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறதாம்.

தனுஷ் “D 50” திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அதனை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.





