- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷின் குபேரா திரைப்படம் திரையரங்குகளில் இத்தனை மணி நேரம் ஓடுகிறதா... அப்படின்னா இரண்டு இடைவேளை விடலாம்...

தனுஷின் குபேரா திரைப்படம் திரையரங்குகளில் இத்தனை மணி நேரம் ஓடுகிறதா… அப்படின்னா இரண்டு இடைவேளை விடலாம் போலயே…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது மிக பிசியாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் தனுஷ். அவருக்கு அடுத்தடுத்த திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ஒவ்வொரு படத்தின் தகவல்களை எல்லாம் கேட்கும் போது அவர் எப்போது இத்தனை படங்களிலும் நடித்து முடிக்க போகிறார் என்று பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போது அவர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதுபோக தனது இட்லி கடை திரைப்படத்தின் பணிகளையும் அவர் முடித்து விட்டார். இதனை தனுசே இயக்கி நடித்திருக்கிறார். படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அருண் விஜய் வருவதால், இட்லி கடை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. நித்யாமேனன் ராஜ்கிரண் பார்த்திபன் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

இதுபோக இளம் இயக்குனர்களுடனும் தனுஷ் கைகோர்த்து இருக்கிறார். அடுத்ததாக அவர் பணிபுரிய இருப்பது போர் தொழில் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் உடன் தான். ஐசரி கணேஷ் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். மமீதா பைஜூ தனுசுக்கு கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்தத் திரைப்படத்தை ஒரே செட்யூலாக எடுக்க உள்ளனர். இதன் பிறகு அமரன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி உடன் கை கோர்க்கிறார் தனுஷ். இதுவும் அமரன் படத்தைப் போலவே உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட இருக்கிறது. அனேகமாக இதன் சூட்டிங் இந்த ஆண்டு இறுதியிலேயே தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மாரி செல்வராஜ் உடனான திரைப்படமும் தனுஷின் லிஸ்டில் இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. இதையும் ஐசரி கணேஷ்தான் தயாரிக்க இருக்கிறார். மிகப்பெரும் பொருட்செலவில் இந்த திரைப்படம் எடுக்கப்பட இருக்கிறது. இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க யாருமே எதிர்பார்க்காத வகையில் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தற்போது தனுஷின் குபேரா திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வரும் ஜூன் 20 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் சூழலில் அதற்கான டீசர், வரும் 25ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. சேகர் கமுலா இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனாவுக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. குபேரா திரைப்படம் மட்டும் இரண்டு மணி நேரம் 50 நிமிடங்கள் இருக்கிறதாம். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இந்த திரைப்படம் இருப்பதால் காட்சிகள் அவ்வளவு நீளமா என பலரும் ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்