- Advertisement -
Homeபொழுதுபோக்குபோர் தொழில் இயக்குனருடன் தனுஷ் கைகோர்க்கும் திரைப்படத்தின் ஹீரோயின் அவர்தான்... தயாரிப்பது இந்த நிறுவனமா... கலக்கலான...

போர் தொழில் இயக்குனருடன் தனுஷ் கைகோர்க்கும் திரைப்படத்தின் ஹீரோயின் அவர்தான்… தயாரிப்பது இந்த நிறுவனமா… கலக்கலான அப்டேட்ஸ் இதோ…

- Advertisement -

தனுஷ் தற்போது இட்லி கடை திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இது அவரது இயக்கத்தில் உருவாகும் நான்காவது திரைப்படம் ஆகும். இதில் நித்யா மேனன், ராஜ்கிரன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். வில்லன் கதாபாத்திரத்தில் அருண் விஜய் வருகிறார். அதுதான் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.

ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசை அமைக்க, பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அருண் விஜய்க்கு இதில் குத்துச்சண்டை வீரர் கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் தனுஷ். ஏப்ரல் 10 ஆம் தேதி அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்துடன், இதனை களம் இறக்க தனுஷ் திட்டமிட்டு இருந்தார்.

- Advertisement -

ஆனால் அதன் திட்டம் தற்போது தள்ளிப் போய் இருக்கிறது. சூட்டிங் பணிகள் முடிய காலதாமதம் ஆனதால் இந்த முடிவை தனுஷ் எடுத்திருக்கிறார். இட்லி கடை திரைப்படத்தை முடித்துவிட்ட மறுநாளே, டெல்லிக்கு பறந்து விட்டார் தனுஷ். அங்கு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அவர் இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே தனுஷ் நடித்து இருக்கும், குபேரா திரைப்படமும் ரிலீஸ் க்கு தயாராகி இருக்கிறது. இது அவரது நடிப்பில் நேரடி தெலுங்கு திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. அங்கு புகழ்பெற்ற இயக்குனரான சேகர் கமுலா தான் இதனை இயக்கியிருக்கிறார். நாகர்ஜுனா ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதனிடையே ஹிந்தி திரைப்படத்தை முடித்துவிட்டு, தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்த இருக்கிறார் தனுஷ். இதில் அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன், தனுஷ் கைகோர்க்கும் படத்தின் ப்ரீ புரோடக்சன் பணிகள் தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முந்தைய திரைப்படத்தைப் போலவே, இதையும் ஒரு பயோபிக் படமாக தான் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.

இதனை முடித்துவிட்டு போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் உடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார் தனுஷ். இந்த திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறதாம். பிரேமலு மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த, மமீதா பைஜூ இதில் கதாநாயகியாக நடிக்கிறாராம். விரைவில் இந்த திரைப்படத்திற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்