- Advertisement -
Homeபொழுதுபோக்குபுல்லட் பட இயக்குனர் மீதான குற்றச்சாட்டுகள் எதுவுமே உண்மையல்ல - மீண்டும் டைரக்டருக்கு வாய்ப்பளித்த லாரன்ஸ்...

புல்லட் பட இயக்குனர் மீதான குற்றச்சாட்டுகள் எதுவுமே உண்மையல்ல – மீண்டும் டைரக்டருக்கு வாய்ப்பளித்த லாரன்ஸ் – படக்குழு தரப்பில் தந்த அதிரடியான பதில்!

- Advertisement -

இயக்குனர் இன்னாசி பாண்டியன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள புல்லட் படக் குழு இந்த படத்தில் ஒரு காட்சி கூட ரீ-சூட் செய்யப்படவில்லை எனவும் தெளிவுபடுத்தி உள்ளது. ஆரம்பத்தில் 20 நிமிட கேமியோவாக இருந்த நடிகர் ராகவா லாரன்ஸ் கதாபாத்திரம் இப்போது 1 மணி நேரம் 15 நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி நான் – தியேட்டரிக்கல் பிசினஸ் மூலமே 60 கோடி ரூபாயை கடந்து மொத்த வியாபாரம் 100 கோடி ரூபாயை இந்த படம் தாண்டி உள்ளது. அதனால் புல்லட் படம் மெகா லாபத்தை பெற்றுள்ளது. மேலும் இயக்குனரின் இன்னாசி பாண்டியன் திறமையால் ஈர்க்கப்பட்ட நடிகர் ராகவா லாரன்ஸ், தனது அடுத்த படத்தை இயக்கவும் வாய்ப்பளித்து அவருக்கு அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்