நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். நடிகர் ரஜினியின் மூத்த மருமகன். இயக்குனர் கஸ்தூரி ராஜா மகன், இயக்குனர் செல்வராகவன் தம்பி என்ற அடையாளங்களை கடந்து நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பல அடையாளங்களை கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில், நடிப்பில் வெளியான ராயன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இந்த படம் 155 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்தது. இந்த படத்தில் இயக்குனராக, நடிகராக பெரிய அளவில் வரவேற்பை பெற்றார்.
கடந்த சில வாரங்களாக நடிகர் தனுஷ் குறித்த பிரச்னை காரணமாக தயாரிப்பாளர் சங்கத்தில் அவருக்கு ரெட்கார்டு போடப்பட்டதாக தகவல் பரவியது. அதாவது பல ஆண்டுகளுக்கு முன் நய்யாண்டி என்ற படத்தில் நடித்த போது தயாரிப்பாளர் கதிரேசன் என்பவரிடம் படத்தில் நடிக்க அட்வான்ஸ் ஆக ரூ. 3 கோடி வாங்கியுள்ளார். ஆனால் அந்த படத்தில் நடிக்கவில்லை.
அதே போல் தயாரிப்பாளர் முரளி ராமசாமி என்பவரது தயாரிப்பில் நடிக்கவும் சில கோடிகள் தனுஷ் பணம் பெற்றதாக தெரிகிறது. அத்துடன் அந்த படம் தயாரிப்பில் தனுஷூம் பெரும்தொகையை முதலீடு செய்தததாக தெரிகிறது. ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பும் சில நாட்கள் நடந்த நிலையில் நின்று போனது.
இந்த பிரச்னைகள் காரணமாக தான் தனுஷ் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுக்கப்பட்ட புகார்கள் காரணமாக, அவருக்கு ரெட்கார்டு போடப்பட்டதாக தெரிய வருகிறது. நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த இந்த விவகாரங்களுக்கு நடிகர் தனுஷ் தற்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அதாவது கதிரேசனிடம் ரூ. 3 கோடி அட்வான்ஸ் பெற்ற நிலையில், அவர் ரூ. 16 கோடி தனுஷிடம் கேட்டார். அதை ரூ. 10 கோடியாக தந்து தனுஷ் பிரச்னையை தீர்த்துளளார்.
அதே போல் இயக்குனர் முரளி ராமசாமி தயாரிப்பில் எடுக்கப்பட்ட பழைய படத்தை தூக்கி போட்டுவிட்டு, புதிய கதையில் நடிக்க ஒப்புக்கொண்ட நடிகர் தனுஷ், அதற்கான கால்ஷீட் தருவதாகவும் ஒத்துக்கொண்டுள்ளார். குறிப்பிட்ட தேதிகளை ஒதுக்கி தரவும் தயாராகி விட்டார். அதனால் தன் மீது இருந்த இரண்டு பிரச்னைகளுக்கும் தனுஷ் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.





