- Advertisement -
Homeபொழுதுபோக்குநானும், இளையராஜாவும் சேர்ந்து பித்தலாட்டம் பண்ணி, ரசிகர்களை எல்லாம் நல்லா ஏமாத்தீட்டோம் - நீண்ட நாள்...

நானும், இளையராஜாவும் சேர்ந்து பித்தலாட்டம் பண்ணி, ரசிகர்களை எல்லாம் நல்லா ஏமாத்தீட்டோம் – நீண்ட நாள் ரகசியத்தை சொன்ன கங்கை அமரன்

- Advertisement -

இசைஞானி இளையராஜாவின் உடன் பிறந்த சகோதரர்தான் கங்கை அமரன். மற்றொரு சகோதரர் ஆர்டி பாஸ்கர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். முதலில் இளையராஜாவின் வலது கரமாக இருந்தவர் கங்கை அமரன்தான். இசைஞானியின் வளர்ச்சி காலத்தில் அண்ணனுடன் இருந்து அவருக்கு ஒரு உதவியாளராக பணிபுரிந்தவர்தான் கங்கை அமரன்.

இளையராஜாவை போலவே, கங்கை அமரனும் இசையமைப்பாளர்தான். நன்றாக பாடக்கூடியவர். திரைப்பட இயக்குநர் என பன்முக திறமைகள் கங்கை அமரனுக்குள் உண்டு. சினிமா உலகில் பலரும் கங்கை அமரனை அமர் என்றுதான் அழைப்பார்கள். துவக்கத்தில் கமல் போன்றவர்கள், அமர்தான் இளையராஜா என தவறாகவும் நினைத்துள்ளனர்.

- Advertisement -

இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரணி என 3 பிள்ளைகளை போல, கங்கை அமரனுக்கு 2 மகன்கள் மட்டுமே. மகள் இல்லை. இயக்குநர் மற்றும் நடிகர் வெங்கட்பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகிய இருவரும்தான் கங்கை அமரனின் பிள்ளைகள். இதில் பிரேம்ஜிக்கு இன்னும் திருமணம் இல்லை.

கடந்த 1990ல் இயக்குநர் வசந்த் இயக்கத்தில் வெளியான படம் கேளடி கண்மணி. இந்த படத்துக்கு இசையமைத்தவர் இளையராஜா. இந்த படத்தில் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கதாநாயகனாக நடித்திருப்பார். ராதிகா நாயகியாக நடித்திருப்பார். இளம் காதல் ஜோடியாக ரமேஷ் அரவிந்த் மற்றும் அஞ்சு நடித்திருப்பர். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக எஸ்பிபி மூச்சு விடாமல் பாடிய, மண்ணில் இந்த காதலின்றி பாடல் பெரிய அளவில் பேசப்பட்டது.

- Advertisement -

கேளடி கண்மணி படம் குறித்தும், மண்ணில் இந்த காதலின்றி பாடல் குறித்தும் சமீபத்தில் கங்கை அமரன் பேசியதாவது, அப்போது வந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மண்ணில் இந்த பாடலின்றி பாடல் பதிவு செய்யப்பட்டது. அந்த படத்தில் எஸ்பிபி ரசிகர்கள் நினைப்பது போல மூச்சு விடாமல் எல்லாம் பாடவில்லை.

நானும் அண்ணன் இளையராஜாவும் செய்த பித்தலாட்டம்தான் அது. டெக்னாலஜின்னும் சொல்லிக் கொள்ளலாம். உண்மையை சொல்லணும் என்றால் நாங்கள் உங்களை நல்லா ஏமாத்திட்டோம் என்று கூறியிருக்கிறார் கங்கை அமரன். ஏறக்குறைய 33 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு உண்மையை சொன்ன கங்கை அமரன் மீது இளையராஜா கடுப்பாகிறாரோ, இல்லையோ, ஆனால் இப்படி எத்தனை விஷயங்களில் ஏமாற்றினார்களோ என ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்