- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதுகூட தெரியல, உங்களுக்கு வெட்கமா இல்லையா என சீனியர் நடிகையை திட்டிய நடிகர் தனுஷ், நயன்தாரா...

இதுகூட தெரியல, உங்களுக்கு வெட்கமா இல்லையா என சீனியர் நடிகையை திட்டிய நடிகர் தனுஷ், நயன்தாரா – விக்னேஷ் சிவன் காதல் விவகாரத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திரங்களான நடிகர் தனுஷ், நடிகை நயன்தாரா இருவரும் துவக்கத்தில் நல்ல நண்பர்களாக இருந்தனர். யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ் – நயன்தாரா ஜோடியாக நடித்தனர். அப்போது அவர்களுக்கு நட்பும் அதிகரித்தது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்கவும் அந்த படத்தின் தயாரிப்பாளராக தனுஷ்சம்மதித்தார்.

ஆனால் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராக்கும் இடையே ஏற்பட்ட நட்பும், நெருக்கமும் விரைவில் காதலாக மாறியது, அந்த நேரத்தில் இருவருமே படப்பிடிப்பில் அதிக கவனம் செலுத்தாமல் தாமதப்படுத்தியதால் தனுஷூக்கு 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் படப்பிடிப்பையே நிறுத்தும் அளவுக்கு தனுஷ் பாதிக்கப்பட்டார்.

- Advertisement -

அந்த கோபத்தில் தான் நயன்தாராவின் திருமண ஆவணப்படத்திற்கு நானும் ரௌடிதான் படத்தின் வீடியோ கிளிப்பிங் பயன்படுத்தக் கூடாது என்று தனுஷ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பும் அளவுக்கு சென்றுள்ளார். நயன்தாராவும் கோபத்தில் பதிலுக்கு தனுஷை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டதால் இந்த பிரச்சனை பூதாகரமாக மாறிவிட்டது.

இந்நிலையில் நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடித்த நடிகை ராதிகா அளித்த பழைய நேர்காணல் ஒன்று, இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ராதிகா கூறுகையில், நானும் ரவுடிதான் சூட்டிங் நடந்த சமயத்தில் ஒரு நாள் தனுஷ் என்னிடம் போனில் பேசினார். அக்கா படப்பிடிப்பு எப்படி போகிறது என்று என்னிடம் கேட்டார். நன்றாக போய்க் கொண்டிருக்கிறது என்று சொன்னேன்.

- Advertisement -

நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதலிப்பது உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார். சும்மா சொல்லாதப்பா அப்படியெல்லாம் ஒன்றும் எனக்கு தெரியவில்லை என்றேன். அதற்கு தனுஷ், நீங்க எல்லாம் இவ்வளவு பெரிய நடிகை என்று சொல்லிக் கொள்ள உங்களுக்கு வெட்கமாக இல்லையா, எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. உங்களுக்கு தெரியவில்லையா என்று கோபமாக கேட்டார்.

அந்த அளவிற்கு என் முன்பு நயன்தாரா விக்னேஷ் சிவனும் எப்போதும் போல் படப்பிடிப்பு தொடர்பாகத்தான் பேசிக் கொண்டார்கள் ஆனால் என்னையே ஏமாற்றி விட்டார்களே, இதையெல்லாம் கவனிக்காத நான் என்ன ஒரு நடிகை என்று கூட எனக்கு தோன்றியது என்று அந்த நேர்காணலில் ராதிகா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்