கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இதில் ஆட்டோ டிரைவராக கிளைமாக்ஸில் ஒரு காட்சியில் நடித்திருப்பார். அதன்பிறகு லவ்டுடே என்ற படத்தை அவரே இயக்கி ஹீரோவாகவும் நடித்தார். படம் மாபெரும் வெற்றி பெற்றது. இவானா சத்யராஜ் ராதிகா யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே ( லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். அதே போல் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் டிராகன் என்ற படத்திலும் பிரதீப் ரங்கநாதன் காதல் கதையில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற பிப்ரவரி 21ம் தேதி ரிலீஸாகிறது.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவான படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். சுருக்கமாக நீக் என அழைக்கப்படுகிறது. இந்த படத்தில் தனுஷின் சகோதரி மகன் நாயகனாக நடித்துள்ளார். என்னை அறிந்தால் விஸ்வாசம் படத்தில் அஜீத்குமார் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் நாயகியாக நடித்துள்ளார். இந்த படமும் பிப்ரவரி 21ம் தேதி ரிலீஸாகிறது.
ஆனால் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம், முதலில் பிப்ரவரி 7ம் தேதியும், டிராகன் படம் பிப்ரவரி 14ம் தேதியும்தான் வெளியாக முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் ரிலீஸ் பிப்ரவரி 6ம் தேதி என அறிவிக்கப்பட்டதால், டிராகன் படமும் நீக் படமும் பிப்ரவரி 21ம் தேதிக்கு ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த சூழலில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை பிரிவியூ ஷோ பார்த்த இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்ஜே சூர்யா, அசந்து போயிருக்கிறார். முழுக்க முழுக்க காதல் களத்தில் உருவான இந்த படத்தை பார்த்த எஸ்ஜே சூர்யா, நடிகர் தனுஷை பாராட்டி தள்ளியிருக்கிறார்.
ராயன் போன்ற ஒரு அதிரடி ஆக்சன் இயக்கிய தனுஷ்தானா நீங்க, என்று தனுஷை கேள்வி கேட்டிருக்கிறார். ரத்தம் கொலை என்று அப்படி ஒரு வன்முறை படம் தந்த தனுஷ் இயக்கிய காதல் படமா இது என்றும் ஆச்சரியப்பட்டிருக்கிறார். நீக் டிராகன் இரண்டு படங்களுமே காதலர்கள் கொண்டாடும் படங்களாக இருப்பதால் பிப்ரவரி 21ம் தேதி டீன் ஏஜ் ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டம் காத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.





