- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் தனுஷுடன் கை கோர்க்கும் வெற்றிமாறன்... ஆனால் இது வடசென்னை 2 இல்லையாம்... தெலுங்கு நடிகர்...

மீண்டும் தனுஷுடன் கை கோர்க்கும் வெற்றிமாறன்… ஆனால் இது வடசென்னை 2 இல்லையாம்… தெலுங்கு நடிகர் வேற உள்ள வர்றாராம்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரிக்க முடியாதது தனுஷ் – வெற்றி மாறன் கூட்டணி என்றே கூறலாம். அந்த அளவுக்கு புரிதலுடன் மிக வலிமையாக இவர்கள் கூட்டணி அமைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என நான்கு தரமான படங்களை கொடுத்துள்ளனர்.

ஆரம்பத்தில் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்த வெற்றிமாறன், அது ஒரு கனாக்காலம் திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போதே தனுஷிடம் கதை கூறியிருக்கிறார். பின்னாளில் இதற்கான பணிகள் முன்னெடுக்க, சுடச்சுட தயாராகியது பொல்லாதவன் திரைப்படம். 2007 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், அன்றைய தேதியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் செய்யப்பட்ட விஜய்யின் அழகிய தமிழ்மகன் படத்தை ஓரங்கட்டியது. பைக் திருட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுத்தது.

- Advertisement -

இதன்பிறகு இரண்டாவது முறையாக இந்த கூட்டணி சேர்ந்த படம்தான் ஆடுகளம். இந்த தடவை சேவல் சண்டையை வெற்றிமாறன் கையில் எடுக்க, அதற்கு ஏற்றாற்போல் அடர்ந்த தாடி, அழுக்கு லுங்கி என தன்னை கருப்பு கதாபாத்திரத்திற்கு தயார்படுத்தி கொண்டார் தனுஷ். மதுரையில் மண் மணம் மாறாமல் எடுக்கப்பட்ட இந்த திரைப்படமும், வித்தியாசமான கதைக்களத்தில் அமைய தனுஷின் ஆகச்சிறந்த நடிப்பிற்கு தேசிய விருது தேடி வந்தது.

இதன்பிறகு தனது கனவு திரைப்படமான வடசென்னையை இயக்க மீண்டும் தனுஷுடனேயே கை கோர்த்தார் வெற்றிமாறன். அமீர், டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆன்ட்ரியா என ஒவ்வொருவருக்கும் கனமான பாத்திரங்களை இயக்குனர் கொடுக்க, வடசென்னை ரசிகர்களின் விருப்ப திரைப்படமாக அமைந்தது.

- Advertisement -

இதனை தொடர்ந்து நான்காவது முறையாக இவர்கள் எடுத்த அசுரன் திரைப்படம், கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த முறை சிவசாமியாகவே படம் முழுக்க வாழ்ந்த தனுஷ், இரண்டாவது முறையாக தேசிய விருதை உச்சி முகர்ந்து முத்தமிட்டார். இந்த நிலையில், தனஷ் கேப்டன் மில்லர், தனது 50வது படம் என பிஸியாக நடித்து கொண்டிருக்க, இந்த பக்கம் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருகிறார் வெற்றிமாறன். இதன் பிறகு அவர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்குகிறார்.

பின்னர் மீண்டும் ஐந்தாவது முறையாக அவர் தனஷுடன் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தில்தான் இவர்கள் இணைய போவதாக பல நாட்கள் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த திரைப்படம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. கேஜிப் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை வெற்றிமாறன், இந்தமுறை கையில் எடுக்கிறாராம். அதிலும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் இதில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. வாடிவாசலை முடித்ததும் வெற்றிமாறன் இதற்கான பணிகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்