- Advertisement -
2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரஜினிகாந்த் நடித்த தர்மன் படமும் மணிரத்னம் இயக்கத்தில் உருவான இஞ்சி வெல்லம் படமும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வினியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் திருப்பூர் சுப்ரமணியம் கூறுகையில், பொங்கலுக்கு இஞ்சி வெல்லம் தர்மன் என 2 படங்கள் ஒரே நேரத்தில் மோதினால் திரையரங்குகள் பகிர்ந்து அளிக்கப்படும். இதனால் போதிய எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்காமல் வசூல் பாதிக்கப்படும் என்று அவர் கூறியிருக்கிறார். இதனால் ஒரு பெரிய படம் வெளியாகி 2 வாரங்கள் கழித்து மற்ற படம் வருவது நல்லது என்றும் அவர் யோசனை தெரிவித்திருக்கிறார்.





