நடிகர் சசிக்குமார் நடிகை சிம்ரன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்ற படம் டூரிஸ்ட் பேமிலி. இந்த படத்தை 24 வயதான இளைஞர் அபிஷன் ஜீவிந்த் டைரக்ட் செய்திருக்கிறார். பீலிங் குட் மூவி என ரசிகர்களால் பாராட்டப்படும் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. நடிகர் சசிக்குமாருக்கு கம்பேக் கொடுத்திருக்கிறது.
டூரிஸ்ட் பேமிலி படத்தை பார்த்த நடிகர்கள் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயன் போன்றோர் அந்த படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டி இருக்கின்றனர். தொடர்ந்து ரசிகர்களும் அந்த படத்தை பார்த்துவிட்டு இணையதளங்களில் பாராட்டி விமர்சித்து வருகின்றனர்.
பொதுவாக ஒரு புதுமுக இயக்குனர் மாஸ் ஹிட் படம் ஒன்றை கொடுத்துவிட்டால் முன்னணி நட்சத்திர நடிகர்களின் பார்வை அவர் மீது திரும்பும். உடனடியாக அவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும். உடனடியாக அவரை நேரில் அழைத்து, எனக்கும் ஒரு கதை பண்ணுங்க என்று சொல்வது வழக்கம். இது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் பொருந்தும்.
இந்நிலையில் டூரிஸ்ட் பேமிலி படத்தை தங்களது வீடுகளில் உள்ள ஹோம் தியேட்டர்களில் கேடிஎம் முறையில் பார்த்து ரசித்த நடிகர்கள் சிம்பு மற்றும் தனுஷ் ஆகியோர், அந்த படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்தை நேரில் அழைத்து பாராட்டி உள்ளனர். அப்போது எனக்கு ஒரு கதை பண்ணுங்க என்று தனித்தனியாக இருவருமே அபிஷன் ஜீவிந்துவிடம் கூறியிருக்கின்றனர்.
அப்போது நடிகர் தனுஷிடம் ஒரு கதையை அபிஷன் ஜீவிந்த் கூறியிருக்கிறார். அந்த கதை பிடித்துப் போக இன்னும் கொஞ்சம் கதையை டெவலப் பண்ணுங்க, இந்த கதையே சூப்பராக இருக்கு என்று தனுஷூம் கூறியிருக்கிறார். அதனால் தனுஷ் அபிஷன் ஜீவிந்த், சிம்பு அபிஷன் ஜீவிந்த் கூட்டணியில் உருவாகும் புதிய படங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.
ஆனால் குட்நைட் லப்பர் பந்து பார்க்கிங் டூரிஸ்ட் பேமிலி போன்ற யதார்த்த படங்களை தந்த இயக்குனர்கள், சிம்பு தனுஷ் போன்ற கமர்ஷியல் ஹீரோக்களை வைத்து படம் பண்ணும்போது அவர்களுக்கான மசாலா கதைகளை தான் உருவாக்கி இயக்க வேண்டும். யதார்த்த கதைகளை தந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அவர்களை. மசாலா இயக்குனர்களாக்கி விட்டுவிட்டு இந்த கமர்ஷியல் ஹீரோக்கள் வேறு படங்களில் நடிக்க சென்று விடுவர். ஆனால் நல்ல படைப்பாளிகளாக தமிழ் சினிமாவுக்குள் வந்த இயக்குனர்கள் வெகுவிரைவில் காணாமல் போய்விடுவர். அப்படி ஒரு நெருக்கடியில் சிக்கியுள்ள அபிஷன் ஜீவிந்த் உஷாராக இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.





