தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என பெயர் வாங்கியவர் ஷங்கர். அதுவும் 1990களிலேயே அப்படி ஒரு மாஸ் டைரக்டராக அவர் சிறந்து விளங்கினார். கடந்த 30 ஆண்டுகால சினிமா பயணத்தில் அவர் இயக்கியது 15 படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 கேம் சேஞ்சர் படங்கள் பிளாப் ஆகிவிட்டன.
ஆனால் அந்த 2 படங்களை தவிர்த்து விட்டு பார்த்தால் ஷங்கர் இயக்கிய ஒவ்வொரு படமும் தமிழ் சினிமாவில் பேர் சொல்லும் படங்களாகவே இருந்திருக்கின்றன. எல்லாவித ரசிகர்களையும் திருப்திபடுத்தும் ஒரு சிறந்த படைப்பாளியாக அவர் தனது படங்களை தந்திருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்தியன் அந்நியன் ஐ ஜெண்டில்மேன் முதல்வன் நண்பன் பாய்ஸ் சிவாஜி எந்திரன் 2.ஓ காதலன் என ஷங்கர் இயக்கிய எல்லா படங்களுமே ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களாக தான் இருந்திருக்கின்றன. ஆனால் இந்தியன் 2 படமும் கேம் சேஞ்சர் படமும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற முடியாமல் போய் விட்டது.
இந்நிலையில் மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற சரித்திர நாவலை படமாக்கும் திட்டத்தில் இயக்குனர் ஷங்கர் இருந்து வருகிறார். இந்த படத்தை 3 பாகங்களாக அவர் எடுக்க உள்ளார். மிக பிரமாண்டமான பட்ஜெட்டில் இந்த படத்தை உருவாக்க உள்ளார். ஆனால் அடுத்தடுத்து 2 தோல்வி படங்களை ஷங்கர் தந்திருப்பதால், உடனடியாக வேள்பாரி படத்தை துவங்குவதில் பல சிக்கல்கள் நீடிக்கிறது.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் இயக்குனர் ஷங்கரை நேரில் சந்தித்த நடிகர் சியான் விக்ரம், தனது மகன் துருவ் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்குங்கள். உங்கள் இயக்கத்தில் நடித்தால் துருவ் விக்ரமுக்கு பெரிய வரவேற்பும் ரசிகர்களின் ஆதரவும் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். ஏனெனில் சியான் விக்ரம் ஷங்கரின் அந்நியன் ஐ படங்களில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றவர்.
அதனால் வேள்பாரி படத்துக்கு முன்பாக ஒரு வெற்றிப் படத்தை இயக்க வேண்டிய கட்டாயத்தில் இயக்குனர் ஷங்கர் இருக்கிறார். இந்தியன் 3 படத்துக்கு பிறகு தனது மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கட்டும் என்று திட்டமிட்டு நேரம் பார்த்து ஷங்கரிடம் இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார் சியான் விக்ரம். இதுகுறித்த ஷங்கரின் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.





