- Advertisement -
Homeபொழுதுபோக்குதாய்கிழவி படத்தில் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்திய சிவகார்த்திகேயன் - அந்த காட்சியில் விசில் சத்தம் காதை...

தாய்கிழவி படத்தில் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்திய சிவகார்த்திகேயன் – அந்த காட்சியில் விசில் சத்தம் காதை பிளக்குதாமே…?

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பது மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அவரது எஸ்கே புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்த தாய்கிழவி படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரலானது.

தாய்கிழவி படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்து வரும் நடிகை ராதிகா ஏற்கனவே பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் இந்த படத்தில் பவுனுத்தாயி என்ற கேரக்டரில் அவர் நிஜத்தில் வாழ்ந்திருக்கிறார் என்றும் பலர் பாராட்டுகுின்றனர்.

- Advertisement -

இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வெளியாக இருந்தது. அந்த படத்துடன் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் மோதும் சூழல் ஏற்பட்டது. அதனால் தளபதி ரசிகர்கள், சிவகார்த்திகேயனை கண்டபடி விமர்சனம் செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தனர்.

ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. ஜனநாயகன் பராசக்தி படங்கள் நேருக்கு நேர் மோதும் வாய்ப்பு இல்லாமல் போனது. ஏனென்றால் ஜனநாயகன் படம் குறிப்பிட்ட ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகவில்லை. இன்னும் அந்த படம் ரிலீஸாகவில்லை. வரும் ஜூன் மாதம்தான் ஜனநாயகன் படம் ரிலீஸாகும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த சூழலில், தாய்கிழவி படத்தில் ஒரு மருத்துவமனை காட்சி வருகிறது. அந்த காட்சியில் நடிகர் சிங்கம்புலி பேசும்போது வீட்டில் ஒவ்வொருவரும் ஒரு அரசியல் கட்சியில் இருப்பதாக சொல்வார். அப்போது தன்னை மக்கள் நீதி மய்யம் என்பார். படத்தில் அவர் தீவிரமான கமல் ரசிகராகவும் இருப்பார்.

அப்போது அடுத்து பேசும் அவரது தம்பியாக நடித்துள்ள நடிகர் பாலசரவணன், தவெக கட்சியில் 18வது வார்டு கவுன்சிலராக இருப்பதாக சொல்வார். கடந்த மாதம் தன்னை திட்டிய தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தவே தாய்கிழவி படத்தில் தவெக கட்சியை தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கொண்டு வந்து தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தியதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்