- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் ஏ வெங்கடேஷ் கூறியதாவது, சினிமா வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் உங்க அப்பா தான் உங்களை கண்ட்ரோலில் வைத்திருக்கிறார், இன்னும் இறங்கி போய் சொன்னால் உங்களை உங்க அப்பா தான் கெடுக்கிறார் என்று சொல்கிறார்களே? இதெல்லாம் உங்க காதுக்கு வருகிறதா? என்று நடிகர் பிரசாந்திடம் கேட்டேன். இது சரியா தவறா என்று கூட தெரியாமல் ஒரு உரிமையில் அவரிடம் நான் கேட்கிறேன். அதற்கு அவர் சொன்ன பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது. என்னுடைய அப்பா எப்படி சார் எனக்கு கெட்டது செய்வார்? என்று கேட்டார். ஒரு அப்பா தன் பையனுக்கு நல்லது மட்டுமே செய்வார் என்று அழகாக சொல்லிட்டார் என்று ஏ வெங்கடேஷ் அதில் கூறியிருக்கிறார்.





