- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் இயக்கிய படத்துக்கு தேசிய விருது கிடைக்க விடாமல் திட்டமிட்டு தடுத்து விட்டனர்...

நான் இயக்கிய படத்துக்கு தேசிய விருது கிடைக்க விடாமல் திட்டமிட்டு தடுத்து விட்டனர் – தங்கலான் பட இயக்குனர் பா ரஞ்சித் பகிரங்க குற்றச்சாட்டு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஒரு இயக்குனராக இருப்பவர் பா ரஞ்சித். அட்டக்கத்தி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பா ரஞ்சித். முதல் படத்தில் காதல் கலந்த காமெடி படத்தை இயக்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த படத்தில்தான் தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், கலையரசன் அறிமுகமாகினர்.

இதையடுத்து மெட்ராஸ் படத்தை இயக்கி, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார். ஒரு சுவர் விளம்பரத்தை அரசியலாக்கி அவர் இயக்கிய படம், வெகுவாக ரசிகர்களை ஈர்த்தது. தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி படத்தை பா ரஞ்சித் இயக்கினார். இந்த படமும் வெற்றி பெற்றது.

இதன் தொடர்ச்சியாக நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தையும் பா ரஞ்சித் இயக்கினார். மும்பை தாராவி பகுதியை கதைக்களமாக கொண்டு உருவான இந்த படத்தில் வில்லனாக நானே படேகர் நடித்திருந்தார். ஹூமா குரேஷி, ஈஸ்வரி ராவ், மணிகண்டன், சம்பத், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் காலா என்கிற கரிகாலன் கேரக்டரில் ரஜினி மிக வித்யாசமான ஒரு தாதா கேரக்டரில் நடிப்பில் வெளுத்து வாங்கியிருந்தார். ஆனாலும் கபாலி அளவுக்கு காலா படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற முடியவில்லை. இந்த படத்தின் சில காட்சிகள் தேவையற்றதாக இருந்ததாக ஒரு விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் ரிலீஸாகி திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது. நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் பா ரஞ்சித் கூறுகையில், 2021ம் ஆண்டில் நேரடியாக ஓடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆனால் படத்தின் இரண்டாம் பகுதி நன்றாக இல்லை என்று சிலர் விமர்சனம் செய்தார்கள்.

சில திரைப்பட விழாக்களில் கிரிட்டிக்ஸ் பிரிவில் சார்பட்டா பரம்பரை படத்துக்கு பல விருதுகள் கிடைத்தன. இந்த விருதுகளை பெற்றால், கண்டிப்பாக மத்திய அரசின் தேசிய விருது கிடைக்கும். ஆனால் சார்பட்டா பரம்பரை படத்துக்கு தேசிய விருது கிடைக்கவில்லை. இதற்கு காரணம், சிலர் என் வேலையை மதிக்க கூடாது என திட்டமிட்டு படத்தை புறக்கணித்தார்கள். என் மீதான வெறுப்பை தான் இப்படி வெளிப்படுத்தினார்கள் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது, என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்