- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி அரசியலுக்கு வருமாறு ரசிகர்கள் வற்புறுத்தினாங்க, ஆனா விஜயை நடிக்க தான் சொல்றாங்க - விளாசித்...

ரஜினி அரசியலுக்கு வருமாறு ரசிகர்கள் வற்புறுத்தினாங்க, ஆனா விஜயை நடிக்க தான் சொல்றாங்க – விளாசித் தள்ளிய இயக்குனர் அமீர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னராக 50 ஆண்டு கால நடிப்பு பயணத்தை கடந்தாண்டில் நிறைவு செய்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இப்போது 75 வயதிலும் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து தலைவர் 173 படத்திலும் அடுத்து கமலுடன் ஒரு படத்திலும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கிறார்.

கடந்த 1994ம் ஆண்டில் பாட்ஷா படம் வெளியான போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதற்கு சரியான நேரடியான பதில் சொல்லாமல் ஆண்டவன் சொன்னால் நான் வருவேன் என்று ரஜினி சொல்லிக்கொண்டு இருந்தார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்த அவர் பிறகு உடல் நலமில்லை என்று கூறி அரசியலுக்கு வராமல் ஒதுங்கி விட்டார். ஆனால் உடல் நலமில்லை என்று சொன்ன பிறகுதான் ரஜினிகாந்த் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதுவரை 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு படத்தில் தான் அவர் நடித்துக்கொண்டு இருந்தார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தீவிர ஆர்வமும் எதிர்பார்ப்பும் காட்டிய நிலையில் பாஜக தரப்பில் இருந்தும் அவருக்கு சிக்னல் கிடைத்தது. ஆனால் ரஜினி அப்போதே அதை ஏற்கவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு முதல்வர் நாற்காலி கிடைக்கும் சாத்தியங்கள் அதிகமாக இருந்தன.

- Advertisement -

ஆனால் ரஜினிகாந்த் ரசிகர்களின் விருப்பத்தை மீறி அரசியலுக்கு வராமல் ஒதுங்கி விட்டார். இதுகுறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் அமீர் கூறியதாவது, ரஜினிகாந்த் அவர்களை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஆனால் விஜய் ரசிகர்கள் யாரும் விஜய் அரசியலுக்கு வாங்கன்னு சொல்லவில்லை.

அது அவருக்குள் இருந்த வேட்கை. அவரது எந்த ரசிகரும் போய் நீங்க ஒரு கட்சி ஆரம்பிங்க. எங்களுக்கு ஒரு மாற்றம் கொண்டு வாங்க, எங்களுக்கு ஒரு நல்லாட்சி கொடுங்கன்னு விஜய்கிட்ட கேட்கலே. ஆனா இப்பவும் ஐயோ நடிப்பை விட்டுட்டு இப்படி போகாதீங்க. நீங்க தொடர்ந்து நடிங்கன்னு அந்த ஆர்வம் மட்டும்தான் ரசிகர்களிடம் இருக்கிறது என்று இயக்குனர் அமீர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்