- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படம் எப்படி இருக்கும்? பகவந்த் கேசரி படத்தின் இயக்குனர் அனில் ரவிபுடி தந்த ஓபன்...

ஜனநாயகன் படம் எப்படி இருக்கும்? பகவந்த் கேசரி படத்தின் இயக்குனர் அனில் ரவிபுடி தந்த ஓபன் ஸ்டேட்மென்ட் – அட கேட்கவே வேற லெவலா இருக்குதே…?

- Advertisement -

கடந்த 2023ம் ஆண்டில் தெலுங்கில் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை வெற்றியை பெற்ற படம்தான் பகவந்த் கேசரி. தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா நாயகனாக நடித்திருந்தார். அவரது மகளாக ஸ்ரீலீலா நடித்திருக்கிறார். இந்த படம் மத்திய அரசின் தேசிய விருது பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம்தான் இப்போது நடிகர் விஜய் நடிப்பில் ஜனநாயகன் படமாக உருவாகி உள்ளது. இதில் நந்தமூரி பாலகிருஷ்ணா கேரக்டரில் விஜயும் ஸ்ரீலீலா நடித்த கேரக்டரில் மமிதா பைஜூவும் நடித்திருக்கின்றனர். தவெக தலைவராக விஜய் இருப்பதால் தமிழக அரசியல்களத்தில் மிகவும் பேசப்படும் ஒரு படமாக இதில் காட்சிகள் இருக்கும் என்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் சிரஞ்சீவி நடிகை நயன்தாரா நடிப்பில் மன ஷங்கர வரபிரசாத் காரு என்கிற படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி டைரக்ட் செய்திருக்கிறார். சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு இந்த படம் வருகிற 14ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் இயக்குனர் அனில் ரவிபுடி பங்கேற்று பேசி வருகிறார். அப்போது ஜனநாயகன் படம் குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணல் ஒன்றில் பேசிய பகவந்த் கேசரி தெலுங்கு படத்தின் இயக்குனர் அனில் ரவிபுடி கூறியதாவது, நடிகர் விஜய்க்கு பகவந்த் கேசரி படம் மிகவும் பிடித்திருந்தது. மேலும் அவரது கடைசி படத்தினை இயக்குவது தொடர்பாக அவரிடம் நான் பேசினேன். ஆனால் அவருக்காக எந்த ஒரு படத்தையும் ரீமேக் செய்ய நான் விரும்பவில்லை.

- Advertisement -

ஒரு நேரடி படம் பண்ணலாம் என்று அவரிடம் கதையும் சொன்னேன். அவரை வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தான் அப்போது நான் சந்தித்து பேசினேன். அது ஒரு இனிமையான சந்திப்பாக எங்களுக்கு அமைந்தது. ஜனநாயகன் படத்துக்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். அந்தப் படத்தின் ஆரம்பத்தில் வரும் 20 நிமிடங்கள் இடைவேளை 2ம் பாதியில் சில பகுதிகள் மட்டுமே பகவந்த் கேசரி படத்தை வைத்து எடுத்து இருக்கிறார்கள்.

ஆனால் ஜனநாயகன் படத்தின் அடிப்படைக் கதை அம்சத்தை மொத்தமாக மாற்றி இருக்கிறார்கள். குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தின் பின்புலத்தினை முழுமையாக மாற்றி ரோபோ சார்ந்த அறிவியல் கதையாக இதில் கூறியிருக்கிறார்கள். தமிழ் ரசிகர்களுக்கு இது ஒரு புதுமையான களமாக இருக்கும் என்று இயக்குனர் அனில் ரவிபுடி அந்த நேர்காணலில் கூறி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்