- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல் தடவையாக சிக்ஸ்பேக் வைத்தது அந்த நடிகர்தான்… அதுவும் என் படத்தில்தான் - இயக்குனர் ஏஆர்...

முதல் தடவையாக சிக்ஸ்பேக் வைத்தது அந்த நடிகர்தான்… அதுவும் என் படத்தில்தான் – இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார், தமிழ் சினிமாவில் முதன்முறையாக நடிகர் சூர்யா தான் சிக்ஸ்பேக் உடம்புடன் திரையில் நடித்தார். அதற்கு முன்பு எந்த நடிகரும் சிக்ஸ்பேக் வைத்து நடித்தது இல்லை. என்னுடைய மகன் நடிப்புக்காக அந்த அளவுக்கு உடலை வருத்திக் கொண்டு நடித்தார் என்று பேசியிருந்தார்.

இதற்கு கோலிவுட் வட்டாரத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர் சூர்யாவுக்கு முன்பே சில நடிகர்கள் சிக்ஸ்பேக் வைத்து நடித்திருப்பதாக கூறினார். குறிப்பாக நடிகர்கள் தனுஷ் விஷால் மற்றும் ரியாஸ்கான் போன்றவர்கள் ஏற்கனவே சிக்ஸ்பேக் வைத்துள்ளனர். சமீபத்தில் நடிகர் சூரி கூட சீமராஜா படத்தில் வரும் ஒரு காட்சிக்காக சிக்ஸ்பேக் வைத்து நடித்திருந்தார். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? என்பது போல் விமர்சித்து பேசியிருந்தனர்.

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்த படம் ஐ. இந்த படத்தில் ஆணழகன் போட்டிக்காக தயாராகும் நடிகர் விக்ரம் சிக்ஸ்பேக் வைத்திருப்பார். இப்படி பல ஹீரோக்கள் சிக்ஸ்பேக் வைத்திருக்கின்றனர். கடினமான உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே சிக்ஸ்பேக் என்கிற கட்டுக்கோப்பான உடல் அமைப்பை கொண்டுவர முடியும். பிறகு நாளடைவில் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி இல்லை என்றால் அது உடல் தோற்றத்துக்கு மாறி வந்துவிடும்.

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இப்போது மதராஸி படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ருக்மணி வசந்த் வித்யுத் ஜம்வால் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த படம் குறித்த பிரமோசனில் ஏஆர் முருகதாஸ் இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கூறியதாவது, நடிகர் அஜீத்குமார் நடிப்பில் மிரட்டல் என்ற படத்தை நான் இயக்கினேன். இந்த மிரட்டல் என்ற படம்தான் பிறகு கஜினி என டைட்டில் மாற்றப்பட்டது. மிரட்டல் படத்தில் அஜீத் சார் சஞ்சய் ராமசாமியாக நடித்தார். சஞ்சய் ராமசாமியாக அவர் நடித்த 2 நாள் படக்காட்சிகள் இன்னும் என்னிடம் இருக்கிறது.

அதை பார்த்தால் இன்றும் பயங்கர பிரமிப்பாக இருக்கும். அஜீத் தான் இந்த படத்துக்கு சிக்ஸ் பேக் வைக்கலாம் என்று யோசனையை கூறினார். அப்போதெல்லாம் சிக்ஸ் பேக் என்ற கான்செப்ட்டே கிடையாது. பின் நாட்களில் சூர்யா அமீர்கானிடம் சிக்ஸ்பேக் நான் வைக்க சொன்னதும் அஜீத் தான் காரணம். அதற்குப் பிறகுதான் சிக்ஸ் பேக் என்கிற கலாச்சாரமே உருவானது என்று இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்