- Advertisement -
Homeபொழுதுபோக்குரெட்ட தல பட இயக்குனர் என்கிட்ட கேட்டார்… இல்லேன்னு என்னால சொல்ல முடியலே… கொடுத்துட்டேன் -...

ரெட்ட தல பட இயக்குனர் என்கிட்ட கேட்டார்… இல்லேன்னு என்னால சொல்ல முடியலே… கொடுத்துட்டேன் – இயக்குனர் ஏஆர் முருகதாஸ் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ். தீனா என்ற அஜீத்குமார் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ந்து கஜினி ஏழாம் அறிவு ரமணா துப்பாக்கி கத்தி சர்கார் என பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். ஆனால் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்பார் பெரிய வெற்றியை பெறவில்லை.

மேலும் இந்த ஆண்டில் சிவகார்த்திகேயன் ருக்மணி வசந்த் நடித்த மதராஸி படத்தை ஏஆர் முருகதாஸ் தந்திருந்தார். இந்த படத்துக்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்த நிலையில் வணிக ரீதியாக மட்டுமே இந்த படம் வெற்றி பெற்றது. இந்தியில் சல்மான்கான் நடித்த சிக்கந்தர் படமும் இயக்குனர் ஏஆர் முருகதாஸ்க்கு ஒரு தோல்வி படமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆனால் சூர்யாவுக்கு கஜினி விஜயகாந்துக்கு ரமணா விஜய்க்கு துப்பாக்கி அஜீத்குமாருக்கு தீனா என ஏஆர் முருகதாஸ் இயக்கிய படங்கள் அவர்களது திரை பயணத்தில் மிக முக்கியமான படங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் இந்தி என 2 மொழி திரைப்படங்களிலும் தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயங்கி வருகிறார். தொடர்ந்து அவர் கதை டிஸ்கஷனில் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அருண் விஜய் நடித்த ரெட்ட தல என்ற படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கலந்துக்கொண்டார். அப்போது அவர் மேடையில் பேசியதாவது, ரெட்ட தல படத்தின் இயக்குனர் என்னிடம் பல ஆண்டுகள் உதவி இயக்குனராக பணி செய்தவர்.

- Advertisement -

நான் டைரக்ட் செய்த கஜினி ஏழாம் அறிவு போன்ற படங்களில் என்கூட அவர் வேலை பார்த்தவர். விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் அவர் என்னுடன் இருந்திருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த நண்பர். இந்த படத்தோட ரெட்ட தல என்கிற டைட்டில் என்னுடையதுதான். நான் ரொம்ப நாட்களாக இந்த டைட்டிலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கனவாக வைத்திருந்த ஒரு டைட்டில் இது.

திடீர் என்று ஒரு நாள் என்கிட்ட வந்து இந்த டைட்டில் எனக்கு வேணும் என்று அவர் கேட்டு விட்டார். நானும் கொடுத்துட்டேன். கொடுக்கலைன்னா அவரே என்னிடம் இருந்து பிடுங்கி இருப்பார். மிகச் சரியான இடத்துக்குதான் அந்த தலைப்பு வந்து இருக்கிறது. மான்கராத்தே படத்தின் மூலம் கிரிஷ் திருக்குமரனை நான்தான் இயக்குனராக அறிமுகப்படுத்தினேன் என்று அதில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்