- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜயகாந்துக்கு கேப்டன் என்ற பெயர் எப்படி வந்தது? அது உண்மையான காரணமல்ல - இயக்குனர்...

நடிகர் விஜயகாந்துக்கு கேப்டன் என்ற பெயர் எப்படி வந்தது? அது உண்மையான காரணமல்ல – இயக்குனர் அரவிந்த் ராஜ் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட ஒரு திரைக்கலைஞராக வாழ்ந்து மறைந்தவர் நடிகர் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் துவக்கத்தில் புரட்சிக்கலைஞர் என்று அழைக்ப்பட்ட விஜயகாந்த் அதற்கு பிறகு ஒரு காலகட்டத்தில் கேப்டன் என அழைக்கப்பட்டார். பிறகு தேமுதிக கட்சியை அவர் துவங்கிய பிறகும் கேப்டன் என்ற பெயரே நீடித்தது.

தமிழக அரசியலில் தேமுதிக கட்சியின் தலைவராக விஜயகாந்த், மக்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பை பெற்றார். முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் எதிர்கட்சி தலைவராகவும் அமர்ந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கிய அவர், 7 ஆண்டுகளாக நோய்களுடன் போராடி கடந்த 2023ம் ஆண்டில் டிசம்பர் மாதம் மறைந்தார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் 150 படங்களுக்கு மேல் நடித்திருந்த விஜயகாந்த், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்தார். அப்போது துபாய் மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் நட்சத்திர கலை இரவு நிகழ்ச்சிகளை நடத்தினார். ரஜினி கமல் உள்ளிட்ட அனைத்து நடிகர் நடிகைகளை இதில் பங்கேற்க செய்தார். அதன் மூலம் வந்த பெரிய தொகையில், சங்கத்தின் கடனை அடைத்தார். நலிந்த கலைஞர்களுக்கு பல உதவிகளை செய்தார்.

துவக்கத்தில் விஜயராஜ் என்ற பெயருடன் வந்த அவர் விஜயகாந்த் ஆனார். பிறகு சினிமா நண்பர்களால் விஜி என அழைக்கப்பட்டார். பிறகு புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் என்று புகழப்பட்டார். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு அந்த பெயர்களை எல்லாம் விட கேப்டன் என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்ததால்தான் அவரை கேப்டன் என ரசிகர்கள் அழைப்பதாக பலரும் கருதுகின்றனர்.

- Advertisement -

இதுகுறித்து விஜயகாந்த் நடித்த செந்தூரப்பூவே இயக்கிய இயக்குனர் அரவிந்த் ராஜ் ஒரு நேர்காணலில் கூறியதாவது, கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்ததால்தான் விஜயகாந்த் கேப்டன் என அழைக்கப்படுவதாக பலரும் தவறாக நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். உண்மை அதுவல்ல, அதற்கு முன்பே அவர் கேப்டன் என்றுதான் நெருங்கிய நண்பர்களால், ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் அழைக்கப்பட்டார்.

அவர் செந்தூரப்பூவே படத்தில் நடித்த போதே அவரது கேரக்டர் கேப்டன்தான். அதனால் படப்பிடிப்பு தளத்திலேயே அவரை பலரும் கேப்டன் என்றுதான் கூப்பிடுவார்கள். அந்த படத்தில் அவருடன் நடித்த ராம்கி, சந்திரசேகர் விஜயகாந்தை கேப்டன் என்றுதான் கூப்பிடுவார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லாரும் கேப்டன் கேப்டன் என்று கூப்பிட்டு அவரது ஆபீஸிலும் கேப்டன் என்றே சொல்ல ஆரம்பித்து விட்டனர். அப்புறம்தான் கேப்டன் என்ற பெயர் வளர்ந்தது. அதன்பிறகுதான் கேப்டன் பிரபாகரன் என்றே படத்துக்கு பெயர் வைத்தனர் என்று, அரவிந்த் ராஜ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்