இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ், மஹேந்திர சிங் தோனி ஆகியோரது வாழ்க்கையை தழுவிய வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் எடுக்கப்பட்ட வேளையில் கிரிக்கெட் வீரர்களும் மெல்ல மெல்ல திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட முன்னாள் இந்திய வீரர்கள் சிலர் தமிழ் படத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி எல்.ஜி.எம் படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்து இருப்பதாக செய்திகள் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

அந்த வகையில் எப்பொழுதுமே தமிழ்நாட்டை தனது இரண்டாவது தாய் வீடு என்று கூறியவரும் தல தோனி தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முதலில் தமிழ் படத்தை தான் தயாரிக்க விரும்புவதாக கூறி lgm என்ற படத்தினை தயாரித்துள்ளார். ஏற்கனவே படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து அண்மையில் இசை வெளியீட்டு விழாவும் முடிவடைந்த வேளையில் ஜூலை 28-ஆம் தேதி இந்த எல்.ஜி.எம் படம் தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது.
ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, தீபா, ஆர்.ஜே. விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கும் படம் தான் lgm. இந்த படத்தின் கதையில் அப்பா இல்லாமல் அம்மாவிடம் வளர்ந்த ஹரிஷ் கல்யாண் திருமணத்திற்கு பிறகு கூட்டு குடும்பமாக வாழ நினைக்கிறார். ஆனால் அவரது காதலியான இவானா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

பின்னர் காதலியின் ஐடியா படி அம்மாவையும், காதலியின் குடும்பத்தையும் சேர்த்து ஒரு குடும்பமாக ஒரு ட்ரிப்புக்கு ஹரிஷ் கல்யாண் அழைத்துச் செல்கிறார். அந்த ட்ரிப்பில் இவானாவும், நதியாவும் காட்டில் தனியாக மாட்டிக் கொள்கின்றனர். இறுதியில் அவர்கள் இருவரும் அங்கிருந்து வெளிவந்து அனைவரும் குடும்பமாக இணைந்தார்களா? என்பதே இந்த படத்தின் கதை. இந்நிலையில் இந்த lgm படத்தில் தோனி கௌரவத் தோற்றத்தில் நடித்திருப்பதாக செய்திகள் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.
ஆனால் நமக்கு கிடைத்த தகவலின் படி : இந்த படத்தில் தோனி நடிக்கவில்லை என்றும் தயாரிப்பு மட்டுமே செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் lgm படப்பிடிப்பு நடைபெற்றிருந்த வேளையில் தோனி முற்றிலுமாக கிரிக்கெட்டின் மீதான பயிற்சியில் இருந்தார். அதோடு அவற்றையெல்லாம் மீறி சென்னை வந்து தோனி படப்பிடிப்பில் பங்கேற்று இருந்தால் நிச்சயம் அது அப்போதே பெரிய வைரல் நியூஸ்-ஆக மாறியிருக்கும். எனவே இந்த படத்தில் தோனி நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.





