- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிக்கு, அவரோட வாய்ஸ் வேல்யூ என்னவென்றே தெரியாது, ஒரு தப்பான ஆளை நல்லவர் என்று அடையாளம்...

ரஜினிக்கு, அவரோட வாய்ஸ் வேல்யூ என்னவென்றே தெரியாது, ஒரு தப்பான ஆளை நல்லவர் என்று அடையாளம் காட்டியவர் அவர் – இப்படி ரஜினியை விமர்சித்தது யார் தெரியுமா

- Advertisement -

சமீபத்தில், ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, நடிகை ரோஜா விவகாரம்தான். தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி என்பவர், ஆந்திரா மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சரான ரோஜாவை மிக மோசமாக விமர்சனம் செய்ததுதான். ரோஜா ஆபாச படங்களில் நடித்தவர் என்ற அவரது குற்றச்சாட்டு பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்ட நிலையில், தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து அமைச்சர் ரோஜா, பத்திரிகையாளர்களை சந்தித்து, கண்ணீர் பேட்டியளித்தார். ரோஜாவுக்கு ஆதரவாக நடிகைகள் குஷ்பு, ராதிகா, ரம்யாகிருஷ்னண் ஆகியோர் தனித்தனியாக வீடியோக்களில் பேசி அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, நடிகை ரோஜா சமீபத்திய டிவி சேனல் நேர்காணல் ஒன்றில் பேசி இருந்தார். அப்போது அவர் கூறியதாவது, என் கணவர், பிள்ளைகள், சகோதரர், நண்பர்கள் போன்றவர்கள் எனக்கு ஆதரவாக இருப்பதால். இந்த பிரச்னையில் நான் தைரியமாக இருக்கிறேன். ஒரு பெண் என்றும் பாராமல், என் மீது அபாண்டமான பழியை சுமத்தி பேசியவர் மீது, நான் இந்திய ஜனாதிபதியை சந்தித்து புகார் தெரிவிக்க இருக்கிறேன்.இதை அப்படியே விட்டுவிடக்கூடாது என்று நினைக்கிறேன்.

நடிகர் ரஜினிகாந்த், என்டிஆர் நூற்றாண்டு விழாவுக்கு ஆந்திரா வந்த போது, தேவையில்லாமல் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பேசினார். சந்திரபாபு நாயுடு மிகவும் நல்லவர். வரும் தேர்தலில் ஓட்டுப் போட்டு அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினார். ரஜினி பெரிய மனிதர் என்ற நிலையில், சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்படுபவர். ஆனால், அவரது வாய்ஸ் வேல்யூ தெரியாமல், ஒரு தவறான நபரை, நல்லவர் என அடையாளம் காட்டி பேசியது தவறு என்பதால், அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

ரஜினிகாந்த் உடன் சில படங்களில் ( உழைப்பாளி, வீரா) நடித்திருக்கிறேன். நட்பு என்பது வேறு. அரசியல் என்பது வேறு. ரஜினி சொல்வதால் மட்டும் சந்திரபாபு நாயுடு தேர்தலில் ஜெயித்துவிட மாட்டார். ஒவ்வொரு தேர்தலின் போதும், ரஜினியை அரசியலுக்கு அழைத்தாலும் அவர் வரவில்லை. ஏனென்றால் சினிமா கவர்ச்சி, புகழ் எல்லாம் அரசியலில் எடுபடாது என்பது அவருக்கும் தெரியும்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு யாராலும் நடிகர்களாக அரசியலில் சாதிக்க முடியவில்லை. ஆந்திராவிலும் என்டிஆர் ஒருவரை தவிர வேறு யாராலும் வெற்றி பெற முடியவில்லை. தேர்தலில் நடிகர்கள் போட்டியிட்டாலும் அவர்களை பார்க்க வரும் கூட்டம், அந்த நடிகர் என்ன பேசுகிறார், என்ன நம்பிக்கை தருகிறார் என்பதை பொறுத்தே ஆதரவு தந்து ஓட்டுப் போடும். இதை எல்லாம் தெரிந்துக்கொண்டு, ரஜினி பேச வேண்டும் என்று அந்த நேர்காணலில் கூறி இருக்கிறார் ரோஜா.

சற்று முன்