- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னோட படத்துக்கு இப்படி ஒரு அநியாயம் நடந்து விட்டதே, குய்கோ படத்துக்கு வீரவணக்கம் என அஞ்சலி...

என்னோட படத்துக்கு இப்படி ஒரு அநியாயம் நடந்து விட்டதே, குய்கோ படத்துக்கு வீரவணக்கம் என அஞ்சலி செலுத்திய அந்த படத்தின் இயக்குநர் – என்னாச்சுங்க ப்ரோ?

- Advertisement -

இப்போதெல்லாம் ஒரு படத்தை பற்றிய பிரமோ என்பது, படம் குறித்த துவக்கப்புள்ளியிலேயே ஆரம்பமாகி விடுகிறது. உதாரணமாக இப்போது ரஜினி 170 படத்தை இயக்குநர் தசெ ஞானவேல் எடுத்துக்கொண்டு இருக்கிறார். இப்போது, அந்த படப்பிடிப்பில்தான் ரஜினி நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால், இப்போதே ரஜினி 171 படத்துக்காக, அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஸ்கிரிப் எழுதும் தகவல், அந்த படத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன் போன்றவர் பற்றிய தகவல்கள் வைரலாகி கொண்டு இருக்கின்றன.

அதாவது படம் வெளியாவதற்கு முன்பே, அந்த படம் குறித்த தகவலை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம், படத்தின் மீதான எதிர்பார்ப்பை, ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்துவது ஒரு விளம்பர நோக்கம். வியாபார யுக்தியாகவும் இருக்கிறது. ஆனால், ஒரு நல்ல படம் குறித்த தகவல் ரசிகர்களுக்கு சென்று சேராததால் அந்த படம் தோல்வியடைந்தால் என்ன நிலை என்பதை தான் இந்த அறிமுக இயக்குநரின் முகநூல் பதிவு ரசிகர்களுக்கு உணர்த்துகிறது.

- Advertisement -

அறிமுக இயக்குநர் அருள் செழியன் இயக்கிய குய்கோ என்ற படம் கடந்த 24ம் தேதி, ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தில் விதார்த், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அந்தோனிதாசன் இசையமைத்து இருந்தார். இந்த படத்தை பார்த்த பத்திரிகையாளர், சினிமா விமர்சகர்கள் குய்கோ படம் மிக சிறப்பாக இருப்பதாக பாராட்டி இருந்தனர்.

இந்த படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம், இந்த படம் ரிலீஸ் ஆகும் தேதியை. 3 தினங்களுக்கு முன், அதாவது கடந்த 21ம் தேதியன்றுதான் வெளியிட்டதாக தெரிகிறது. மேலும் பல முக்கிய நகரங்கள் மற்றும் ஊர்களில் இந்த படம் வெளியாகவில்லை. இந்த படம் வெளியானதே பலருக்கும் தெரியவில்லை. சினிமா ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பற்றிய தகவலே சென்று சேரவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அந்த படத்தின் இயக்குநர் அருள்செழியன் தனது முகநூல் பதிவில், குய்கோ படத்தை ஆதரித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. ரசிகர்களின் ஆதரவு இருந்தும், பாராட்டுகள் குவிந்தும் பயனில்லை. ஏனென்றால், குய்கோ படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம், அதை வலுக்கட்டாயமாக பிரீசர் பாக்ஸில் வைத்து ஆணியடித்து உயிரோடு அஞ்சலிக்கு வைத்து விட்டார்கள். குய்கோவுக்கு என் வீர வணக்கம், என அதில் பதிவிட்டுள்ளார்.

மேலும், பின்குறிப்பாக துணை நின்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி பதிவு, மூன்றாம் நாள் காரியம் முடிந்ததும் வெளியிடப்படும் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதாவது நல்ல படைப்பான தனது படத்தை தயாரிப்பு நிறுவனம் வேண்டும் என்றே உரிய முறையில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்ற வருத்தத்தை, கவலையை, கோபத்தை அருள்செழியன் இந்த விதமாக வெளிப்படுத்தியிருப்பது, ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்