- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதயம் முரளி படத்தில் நடிகர் அதர்வாவுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகர் - அந்த ஒரு...

இதயம் முரளி படத்தில் நடிகர் அதர்வாவுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகர் – அந்த ஒரு கண்டிஷன் போட்டு நடிக்க வந்த மலையாள நடிகர் பகத் ஃபாசில்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1980 – 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார். குறிப்பாக அவர் நடித்த இதயம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நடிகர் முரளி பெரும்பாலான படங்களில் கல்லூரி மாணவராக காதல் கதைகளில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் முரளியின் மகன் அதர்வா பாணா காத்தாடி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து சண்டிவீரன் 100 கணிதன் ஈட்டி இமைக்கா நொடிகள் பரதேசி உள்ளிட்ட பல படங்களில் அதர்வா நடித்திருக்கிறார். எனினும் அவர் முன்னணி நட்சத்திர நடிகராக இன்னும் சினிமாவில் உயரவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான காதல் படம் இதயம் முரளி. இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் ஃபாசில் ஒரு முக்கியமான கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ஆனால் இந்த கேரக்டரில் நடிக்க முதலில் தேர்வானவர் பிரபல வில்லன் நடிகர் நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் எஸ்ஜே சூர்யா தான். ஆனால் அவர் நடிக்கவில்லை.

இதுகுறித்து இதயம் முரளி படத்தின் இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் கூறியதாவது, இதயம் முரளி படத்தில் பகத் ஃபாசில் நடித்த கேரக்டரில் முதலில் எஸ்ஜே சூர்யாவை தான் நடிக்க வைக்க முடிவு செய்திருந்தோம். ஆனால் அவர் அந்த கெஸ்ட் ரோலில் நடிக்க விரும்பவில்லை என்று மறுத்துவிட்டார். அதன் பிறகு தான் பகத் ஃபாசிலை ர்களை அணுகி இதயம் முரளி படத்தின் பிசினஸ் கட் காட்சிகளை காட்டினேன்.

- Advertisement -

அவரும் மறுத்து விடுவார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் அவருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நேரம் இருந்ததால் 4 ஞாயிற்றுக்கிழமைகளில் அவரது காட்சிகளை படமாக்கினோம் என்று இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் கூறியிருக்கிறார். அதாவது பகத் ஃபாசில் அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே தன்னால் தேதி ஒதுக்கித் தர முடியும் என்று கூறி கண்டிஷன் போட்டு தான் அந்த படத்தில் நடித்திருக்கிறார்.

இதயம் முரளி படத்தில் கயாடு லோஹர் ப்ரீத்தி முகுந்தன் என இருவரும் கதாநாயகியாக நடித்திருந்தனர். நட்டி நடராஜன் ஜோனிதா காந்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இதயம் முரளி படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்