- Advertisement -
Homeபொழுதுபோக்குசெய்த தவறுகளுக்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் - மாஸ் ஹிட் கொடுத்த டிராகன் பட...

செய்த தவறுகளுக்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் – மாஸ் ஹிட் கொடுத்த டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இப்படி சொல்லிட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் எப்போதாவதுதான் குறிஞ்சி மலர் போல நல்ல படங்கள் திரைக்கு வருகின்றன. இல்லை என்றால் ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் போன்ற கமர்ஷியல் ஹீரோக்களின் படங்கள்தான் தியேட்டர்களில் ஓடும். 90 சதவீதம் இவர்களது படங்கள், ஹீரோவை மையப்படுத்திய கதைகளாக தான் இருக்கும். ஹீரோ கொம்பாதி கொம்பனாக இருந்து வில்லன்களை வீழ்த்தி வெற்றி நாயகனாக திகழ்வதே படமாக இருக்கும்.

இப்படி யதார்த்தமே இல்லாமல், ஹீரோவுக்காக செய்யப்பட்ட கதைகளை இயக்கவும் தயாரிக்கவும் தமிழ் சினிமா வியாபாரத்தை, லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டிருப்பதால் எத்தனையோ நல்ல படங்கள் திரைக்கு வந்து காணாமல் போயிருக்கின்றன. ஆனால் இப்போது ரசிகர்கள் சுதாரித்துக்கொண்டு விட்டனர்.

- Advertisement -

அதனால்தான் பார்க்கிங் குட்நைட் சித்தா லப்பர் பந்து போன்ற படங்களின் வரிசையில் அடுத்தபடியாக டிராகன் படமும் ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை அடையாளத்தை பெற்றிருக்கிறது. இந்த படம் வெளியாகி 3 நாட்களில் 47 கோடி ரூபாய் வசூலை கடந்த நிலையில் வரும் நாட்களில் விரைவில் ரூ. 100 கோடி வசூலை எட்டிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் மையக்கதையே கதாநாயகன் தன் பெற்றோரை ஏமாற்றுகிறான், கல்லூரியில் ஆசிரியர்களை அலட்சியப்படுத்தி படிப்பில் கோட்டை விடுகிறான். 4 ஆண்டுகளில் 48 அரியர்ஸ் வைக்கிறான். வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு, நண்பர்களின் அறையில் பொழுதை கழித்து பெற்றோரை ஏமாற்றுகிறார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் போலி சான்றிழ் மூலம் அதிக சம்பளம் தரும் பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர பெற்றோரிடமே ரூ. 10 லட்சம் ஏமாற்றி வாங்குகிறார். அதே போல் பணக்கார வீட்டுப் பெண்ணை நிச்சயித்து, அந்த பெண்ணிடமும் நடித்து ஏமாற்றுகிறான். இறுதியில் தேர்வில் விடைத்தாளை மாற்றி ஏமாற்றியும் பாஸ் செய்வது என பலவித மோசடிகளை செய்யும் நாயகன், கடைசியில் அனைவரிடமும் தன் குற்றங்களை வெளிப்படுத்தி நேர்மையே முக்கியம் என்பதை ரசிகர்களுக்கு சொல்கிறான்.

இதுகுறித்து டிராகன் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கூறுகையில், நான் டாக்டராக வேண்டும் என்ற எனது பெற்றோரின் கனவை நான் நிறைவேற்றவில்லை. இன்ஜினியரிங் கல்லுாரியில் படித்த போது அடங்காத மாணவனாக இருந்தேன். அதற்காக என் பெற்றோர் மற்றும் நான் படித்த கல்லூரி ஆசிரியர்களிடம் நான் கேட்கும் மன்னிப்புதான் டிராகன் படம் என்று பகிரங்கமாக கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்