- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜயை நான் அவமானம் செய்தேனா? என்னை விட வயதில் சின்னவர் அவர்… அந்த சம்பவத்தை...

நடிகர் விஜயை நான் அவமானம் செய்தேனா? என்னை விட வயதில் சின்னவர் அவர்… அந்த சம்பவத்தை உதாரணமாக சொன்ன இயக்குனர் பாலா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் விஜய். இப்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். அடுத்த முதலமைச்சராக தமிழகத்தில் பதவியேற்கப் போவது நான்தான் என்று சவால்விட்டு வருகிறார்.

இயக்குனர் பாலா, தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஒரு முக்கிய பபை்பாளியாக இருக்கிறார். ஒரு நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் வந்த போது, அங்கிருந்த மற்றவர்கள் எழுந்து மரியாதை தந்த நிலையில் இயக்குனர் பாலா எழுந்திருக்கவில்லை. இது விஜயை அவர் அவமதித்த ஒரு செயலாக இணையத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

இதுகுறித்து இயக்குனர் பாலா நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, இந்த விஷயம் தானாக நடந்தது. ஆனால் செய்தியாக ஆக்கப்பட்டு விட்டது. விஜய் என்னை விட வயதில் எத்தனையோ வயது சின்ன பையன்தான். அவர் வரும்போது நான் ஏன் எழுந்திரிச்சு நிற்க வேண்டும்.

ஒருவேளை நான் எழுந்திருச்சு நிற்காதது மரியாதை குறைவு என்று பார்த்தாலும், அது கவனக்குறைவாக ஏதேச்சையாக நடந்ததுதான். பர்பஸ்ஸாக ஒருவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் எனக்கு கிடையாது. இருந்தாலும் ஒரு விஷயத்தை சொல்கிறேன். எனக்கு விஜயை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

- Advertisement -

உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் என் குழந்தை விளையாடிட்டு இருந்தாள். விஜய், விஜய் மனைவி, நான் என் மனைவி என எல்லோரும் வீட்டில் பேசிக்கொண்டு இருக்கிறோம். அப்போது என் பொண்ணுக்கு விஜய் பற்றி தெரியாது. அவரது மடியில் ஏறி உட்கார்ந்துக்கொண்டாள்.

அப்போது நடிகர் விஜய் செல்போன் கேமராவில் என் மகளுடன் செல்பி எடுக்க போனை கையில் எடுத்து விட்டார். ஆனால் அப்போது என்னை பார்த்து, ஒரு செல்பி எடுத்துக்கட்டுமா என என்னிடம் பர்மிஷன் கேட்டார். அப்படிப்பட்ட டிசிப்பிளின் கொண்ட அவரை நான் எதற்காக இன்சல்ட் பண்ண வேண்டும். என்னை பற்றி எனக்கு தெரியும். அதனால் என்னை பற்றிய விமர்சனங்களுக்கு நான் விளக்கம் தர விரும்புவதில்லை என்று பாலா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்