- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் நடித்துள்ள படம் புஷ்பா படக் கதையை காப்பியடித்து உருவானதா? டீசர் பார்த்த ரசிகர்கள் குழப்பம்...

தனுஷ் நடித்துள்ள படம் புஷ்பா படக் கதையை காப்பியடித்து உருவானதா? டீசர் பார்த்த ரசிகர்கள் குழப்பம் – விளக்கம் தந்த ஓம் பட இயக்குனர்!

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ஓம் என்ற திரைப்படம் வரும் அக்டோபர் 16ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ளது. அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் அவரது 55வது படத்திற்கு ஓம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.

அதே நேரத்தில் இந்த படம் குறித்த விமர்சனங்களும் இணையத்தில் வர தொடங்கி விட்டது. ஓம் படத்தில் ஸ்ரீலீலா சாய் பல்லவி என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரது கேரக்டர் பெயர் கார்த்திகேயன் என்று சொல்லப்படுகிறது. ஓம் சேப்டர் 1 என்கிற பெயரில் முதல் பாகமாக வரும் இந்த படம் வரும் அக்டோபர் 16ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

- Advertisement -

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ஓம் படம் ஐகான் ஸ்டார் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படம் போலவே இருப்பதாக விமர்சனம் எழுதுள்ளது. ஏனெனில் இந்த படத்தின் டீசரில் ஒரு காட்சியில் காட்டுக்குள் 50க்கும் மேற்பட்ட மரம் வெட்டும் தொழிலாளர்களை போலீசார் சுற்றி விளைத்து பிடித்து துப்பாக்கியால் சுட்டுத்தள்ள ஆயுத்தமாகின்றனர்.

அப்போது அண்ணாமலையாரே என அந்த கூட்டத்தில் உள்ள சிலர் கூச்சலிடும் போது நடிகர் தனுஷ் கோடாளியுடன் அங்கே வந்து போலீசாருடன் சண்டையிடுவது போல் காட்சிகள் டீசரில் காட்டப்பட்டுள்ளது. அதனால் இந்த படம் புஷ்பா படத்தைப் போல செம்மரக் கடத்தலை அடிப்படையாகக் கொண்டு உருவானதா என்ற சந்தேகமும் குழப்பமும் டீசர் பார்த்த ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

- Advertisement -

இதுகுறித்து டீசர் வெளியீட்டின் போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூறுகையில், டீசரில் நீங்கள் பார்த்தது ஒரு காட்சி தான். அதை பார்க்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயம் தோன்றும். அந்த விவாதத்தை தொடங்க தான் இந்த டீசர் வீடியோவை நாங்கள் வெளியிட்டுள்ளோம். அதைத் தாண்டி படத்தில் பல விஷயங்கள் இருக்கின்றன. அது ஒவ்வொன்றாக வரும்போது தெரிய வரும்.

சென்சேஷன்களுக்காக நான் இந்த ஓம் டைட்டில் வைக்கவில்லை. இந்த படத்தின் கதையை எழுதும்போதே நான் இந்த டைட்டிலை எழுதிவிட்டேன். செம்மர கடத்தல் செய்யும் தமிழர்களை பெருமைப்படுத்தும் வகையில் கதை இருக்குமா என சிலர் கேட்கிறார்கள். இது யாரையும் பெருமைப்படுத்தும் படம் அல்ல என்று இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அப்போது வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்