- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமார் சொன்னதும் நடக்கலே, நீங்க சொன்னாலும் அது நடக்காது - நடிகர் கமல்ஹாசனை துணிச்சலாக கலாய்த்து...

அஜீத்குமார் சொன்னதும் நடக்கலே, நீங்க சொன்னாலும் அது நடக்காது – நடிகர் கமல்ஹாசனை துணிச்சலாக கலாய்த்து தள்ளிய பிரபல இயக்குனர்!

- Advertisement -

பிரபல நாடக கலைஞர் மற்றும் நடிகர், எழுத்தாளர் கிரேஸி மோகன் எழுதிய 25 புத்தகங்கள் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் நடிகர் ஜெயராம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது, நான் கமல் சாரை கடைசியாக அவர் அமெரிக்கா செல்வதற்கு முன்புதான் நேரில் பார்த்தேன்.

இந்த நிகழ்ச்சிக்கு நான் வருவதற்கு காரணமே கமல்ஹாசன் மற்றும் ஜெயராம் ஆகியோரை நேரில் பார்த்துவிட வேண்டும் என்பதற்காகத்தான். கமல் சார் ஒரு துறையில் இருந்தால் பரவாயில்லை. ஒரு புறம் அரசியல் மறுபுறம் சினிமா. இப்போது புதிதாக ஏஐ தொழில்நுட்பமும் கற்றிருக்கிறார். அடுத்து ஏஐ தொழில்நுட்பத்தில் அவர் என்ன செய்யப் போகிறார் என்று ஆச்சரியமாக காத்துக் கொண்டிருக்கிறோம்.

அஜீத்குமார் ஒருமுறை என்னை யாரும் இனிமேல் தல என்று கூப்பிட வேண்டாம் என்று சொன்னார். ஆனால் அவரது நடிப்பில் இப்போது வெளியான படம் முழுவதும் அவரை தல தல என்றுதான் கூப்பிடுகின்றனர். அவரும் அந்த படத்தில் டப்பிங் பேசியிருக்கிறார். இதை மாற்றவே முடியாது.

அதுபோல்தான் நீங்களும் உலக நாயகன் என்று என்னை கூப்பிட வேண்டாம் என்று கூறுகிறீர்கள். நீங்கள் யார் சார் அப்படி சொல்வதற்கு? நாங்கள் உங்களை உலக நாயகன் என்றுதான் கூப்பிடுவோம். இது ஒரு அன்பு. ஒரு தலை காதல் மாதிரி. நீங்கள் காதலிக்கவில்லை என்றால் பரவாயில்லை.

நீங்க என்ன சார் பத்மஸ்ரீ என்று உங்கள் பெயருக்கு முன்னால் போடாமல் இருக்கிறீர்கள்? பத்மபூஷன் பத்மவிபூஷன் என நிறைய பேர் வாங்கி விட்டார்கள். தனியாக நிற்க வேண்டும் என்றால் ஒரு பெயர் வேண்டும் அல்லவா? அதனால் நாங்கள் உலகநாயகன் என்று உங்களை கூப்பிடுவோம். உலகநாயகன் கமல் சார் என்று தான் கூப்பிடுவோம்.

அவருக்கு அந்த பட்டம் வேண்டாம் என்றால் அவர் சொல்லிக் கொண்டு போகட்டும். நம்மை நிறுத்த முடியாது என்று இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் அந்த விழாவில் பேசியிருக்கிறார். நடிகர் கமல் நடித்த அவ்வை சண்முகி தெனாலி தசாவதாரம் பஞ்சதந்திரம் ஆகிய படங்களை இயக்கியவர் கேஎஸ் ரவிக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்