- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் படப் பாடலை மிக கேவலமான பாடல் என விமர்சித்த பிரபல இயக்குனர் - ...

சிவகார்த்திகேயன் படப் பாடலை மிக கேவலமான பாடல் என விமர்சித்த பிரபல இயக்குனர் – உண்மையை போட்டுடைத்த கவிஞர்!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் பல படங்களில் நடித்தார். அதில் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ஆதரவை ரசிகர்களிடம் பெற்றுத் தந்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்திருந்தார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சத்யராஜ் ஸ்ரீ ரஞ்சனி சூரி பிந்து மாதவி குமரவேல் காதல் தண்டபாணி ஹலோ கந்தசாமி மொட்டை ராஜேந்திரன் வினோதினி வைத்யநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்தது. இசையமைப்பாளர் இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் டிரண்டிங் ஆனது.

குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ஊதாக்கலரு ரிப்பன் யாரு உனக்கு அப்பன் என்ற பாடல் பெரிய அளவில் வைரலானது. கோவில் திருவிழாவில் படத்தின் நாயகி ஸ்ரீ திவ்யாவை பார்த்து நாயகன் சிவகார்த்திகேயன் பாடி ஆடுவது போல் இந்த காட்சி படமாக்கப்பட்டு இருந்தது. இதில் நாயகியின் அப்பாவாக சத்யராஜ் நடித்திருந்தார்.

ஜாலியான ஒரு வாலிபராக பெண்களை கலாய்க்கும், வளரிளம் பெண்களின் திருமணத்தை எதிர்க்கும் ஒரு கேரக்டரில் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் அதகளம் செய்திருந்தார். அவரும் சூரியும் காமெடி காம்பினேஷனில் படம் முழுக்க ரசிக்க வைத்தனர். சத்யராஜூம் அவரது பங்குக்கு தனது லொள்ளு நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற கவிஞர் யுகபாரதி கூறியதாவது, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இடம்பெற்ற ஊதாக் கலரு ரிப்பன் பாடலை அந்த படத்திற்காக நான் எழுதவில்லை. இயக்குனர் எழில் இயக்கத்தில் விமல் நடித்த தேசிங்குராஜா திரைப்படத்திற்காக நானும் இசையமைப்பாளர் இமானும் அந்த பாடலை உருவாக்கினோம்.

ஆனால் ஊதாக் கலரு ரிப்பன் பாடலைக் கேட்டதும், நம்ம படத்துக்கு இப்படி ஒரு கேவலமான பாடல் தேவையா என்று தேசிங்கு ராஜா படத்தின் இயக்குனர் எழில் கேட்டார். அப்போது நானும் இமானும் ரொம்பவும் வருத்தப்பட்டோம். அதற்கு பின்புதான் அந்த பாடலை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இடம்பெறச் செய்தோம். அது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஹிட் பாடலாக ஆனது என்று கவிஞர் யுகபாரதி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்