- Advertisement -
Homeபொழுதுபோக்குகில்லி படத்தில் விஜய், திரிஷா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது அவங்க ரெண்டு பேரும்தான் -...

கில்லி படத்தில் விஜய், திரிஷா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது அவங்க ரெண்டு பேரும்தான் – டைரக்டர் தரணி சொன்ன ஆச்சரியமான தகவல்

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் கில்லி. இந்த படத்தில் விஜய் நடிப்பு வேற லெவலில் இருந்தது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருந்தார். டைரக்டர் தரணி இயக்கிய இந்த படத்தின் பாடல்களும், சண்டை காட்சிகளும், காமெடியும் வேற லெவலில் இருந்ததால் இந்த படம், அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்துப் போய் மாஸ் ஹிட் படமாக, விஜய் கேரியரில் பெரிய மாற்றத்தை கொடுத்தது.

சென்னையில் உள்ள போலீஸ் அதிகாரி மகன் வேலு ( விஜய்) மதுரைக்கு கபடி மேட்ச் விளையாட செல்கிறார். அங்கு முத்துப்பாண்டி ( பிரகாஷ் ராஜ்) தனலட்சுமியை ( திரிஷா) கட்டாய திருமணம் செய்ய முயற்சிக்க, விஜய் திரிஷாவை காப்பாற்றி, மீட்டு தன் வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஔித்து வைக்கிறார்.

- Advertisement -

மீண்டும் திரிஷாவை கண்டுபிடிக்கும் வில்லன் பிரகாஷ் ராஜூடன் மோதி விஜய், திரிஷாவுடன் இணைவதுதான் இந்த படத்தின் கதை. இதில் விஜயின் துடிப்பான நடிப்பு, பிரகாஷ் ராஜின் திமிரான நடிப்பு, திரிஷாவின் பண்பட்ட நடிப்பு என பல விஷயங்கள், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. இப்போதும் டிவி சேனலில் இந்த படம் காட்டப்பட்டால், டிஆர்பி ரேட்டிங் எகிறி விடுகிறது.

இந்த படத்துக்கு பிறகு ஆதி, குருவி, திருப்பாச்சி, லியோ ஆகிய படங்களில் விஜய் – திரிஷா ஜோடி சேர்ந்த நிலையில், திருப்பாச்சி, லியோ என 2 படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில், விஜயுடன் ஒரு அயிட்டம் பாட்டுக்கு திரிஷா குத்தாட்டம் போட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இயக்குனர் தரணி, பல நல்ல ஹிட் படங்களை கொடுத்தவர். விஜய்க்கு அவர் கில்லி என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்து, அவரை வேற லெவலில் காட்டினார். அதே போல் இந்த படத்தில் நடித்த விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் என பலருக்கும் இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது என்றால் அது மிகையல்ல. தில், ஒஸ்தி, தூள், எதிரும் புதிரும், குருவி படங்களின் இயக்கியதும் தரணிதான்.

நடிகர் சியான் விக்ரம், டைரக்டர் தரணியின் நெருங்கிய நண்பர். விக்ரம் நடித்த தில், தூள் போன்ற மாஸ் ஹிட் படங்களை இயக்கினார். அதே போல் கில்லி படத்தில் கதாநாயகனாக விஜய் கேரக்டரில் சியான் விக்ரமும், திரிஷா கேரக்டரில் ஜோதிகாவும்தான் நடிப்பதாக இருந்தது. அவர்களை தான் முதலில் தரணி தேர்வு செய்திருந்தார். ஆனால் அவர்கள் இருவருமே அப்போது வேறு படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்துக்கொண்டு இருந்ததால்தான், அந்த கேரக்டர்களில் விஜய் – திரிஷா நடித்ததாக, டைரக்டர் தரணி சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்