இயக்குனர் கே பாக்யராஜ் அவர் இயக்கிய படங்களில் பெரும்பாலும் அவர்தான் ஹீரோவாக நடித்தார். தனது கதாபாத்திரத்துக்கு ஏற்பட்டபடி கதைக்களங்களை உருவாக்கி அவர் நடித்தது படத்துக்கும் வெற்றியை கொடுத்தது. தனிப்பட்ட முறையில் அவரது இமேஜூக்கும் அந்த கேரக்டர்கள் மிக சிறப்பாக பொருந்தி வெற்றியை கொடுத்தது.
இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கி நடித்த படம் சின்னவீடு. கடந்த 1985ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி சின்ன வீடு படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தில் கே பாக்யராஜ் கல்பனா கேகே சௌந்தர் கோவை சரளா ஜெய்கணேஷ் மண்ணாங்கட்டி சுப்ரமணி அனு பாபிதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் அழகான ஹீரோ கே பாக்யராஜ், உடல் பருமனுடன் குண்டாக இருக்கும் தனது மனைவி கல்பனாவை வெறுத்து அவருடன் கட்டாயத்தில் குடும்பம் நடத்துகிறார். அழகான பெண் பானுவை தேடிச் சென்று அவருடன் காதல் வாழ்க்கை நடத்துவதுதான் படத்தின் கதை. கடைசியில் வழக்கம் போல் ஹீரோ திருந்துவதுதான் கதை.
இந்த படம் வெளியாவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு 1982ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படம் வெளியானது. இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் மோகன் சுகாசினி ராதா எஸ்வி சேகர் வினு சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடித்த படத்தின் கதையும் சின்னவீடு கதையை போன்றதுதான்.
அழகில்லாத கிராமத்து பெண் அருக்காணியை பெற்றோர் கட்டாயத்தில் திருமணம் செய்துக்கொள்ளும் மோகன் பிறகு மாடர்ன் கேர்ள் ஆக உள்ள ராதாவின் மீது காதல் கொண்டு அவருடன் குடும்பம் நடத்துவதுதான் கதை. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் பாதிப்பு ரசிகர்களிடம் குறையாத நிலையில் 2 ஆண்டுகளில் மீண்டும் அதே கதையம்சத்தில் சின்னவீடு படம் வெளியானால் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதால், படம் ரெடியான பிறகும் சின்ன வீடு படத்தை 6 மாதங்கள் கழித்து தாமதமாக இயக்குனர் கே பாக்யராஜ் ரிலீஸ் செய்திருக்கிறார். எனினும் சின்னவீடு படமும் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.





