- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் அவர் பேரை எங்கேயுமே சொன்னதில்லே, முதல் படத்துலேயே நான் அவர்கிட்ட கமல் கேரக்டரை அப்படி...

நான் அவர் பேரை எங்கேயுமே சொன்னதில்லே, முதல் படத்துலேயே நான் அவர்கிட்ட கமல் கேரக்டரை அப்படி மாத்த சொன்னேன் – பாரதிராஜா குறித்து பேசிய இயக்குனர் கே பாக்யராஜ்!

- Advertisement -

இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிசெய்து பிறகு இயக்குனர் ஆகி வெற்றி பெற்றவர் கே பாக்யராஜ். அவர் எப்போதுமே எங்க டைரக்டர் என்றுதான் பாரதிராஜாவை குறிப்பிடுவார். பெயரை சொல்ல மாட்டார். இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் கே பாக்யராஜ் கூறியதாவது, 16 வயதினிலே படத்தில்தான் நான் அவரிடம் சேர்ந்தேன்.

முதல் முதலாக அந்த படத்தில்தான் அவருடன் நான் பணி செய்தேன். வேலைக்கு சேர்ந்து கொஞ்ச நாட்கள் தான் ஆகியிருந்தது. அவர் புரொடியூசர் பைனான்சியர் டிஸ்ட்ரிபியூட்டர் என எல்லோரிடமும் 16 வயதினிலே படத்தின் கதையை அப்படியே மைண்டில் வைத்து அசத்தலாக சொல்லுவார். அவர் சொல்லுவதை நான் அப்படியே கேட்டுக் கொண்டே இருப்பேன்.

ஒருமுறை என்னிடம் வந்து, என்னைய்யா கதையை நான் சொல்லிட்டு இருக்கேன். ஸ்கிரிப்ட் நீதான் காப்பி பண்றே. உனக்கு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுய்யா என்று கேட்டார். ஆனால் அவர் மற்றவர்களிடம் கோபப்பட்டு பேசுவதை பார்த்திருக்கிறேன். அதனால் பயமாக இருந்தது. பயப்படாமல் சொல்லுய்யா என்று பாரதிராஜா சொன்னார்.

அப்போது நான், இந்த சப்பாணி கேரக்டர் மற்றவர்களைப் போல் சகஜமாக பேசுவது போல் உள்ளது. சப்பாணி என்பவன் விவரம் இல்லாதவன். கிராமத்து ஆள். அவன் அப்படி சாதாரணமாக பேசாமல் மாடுலேஷன் மாத்தி பேசினால் நன்றாக இருக்கும் என்று சொல்லி மைலு என்று நான் ஒரு ஸ்லாங்கில் இழுத்தபடி பேசி காட்டினேன். அதை கேட்டவுடன் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அதேபோல் சப்பாணி பேச வேண்டிய டயலாக் எல்லாம் அதே மாதிரி என்னை பேசி காட்ட சொல்லி ரசித்தார்.

அதன் பிறகு ஜிடி என்று ஒரு பைனான்சியர் வந்தார். அவரிடம் கதை சொல்ல வேண்டும். அப்போது ராஜன் இங்க வாய்யா என்று கூப்பிட்டு என்னை கதை சொல்லச் சொன்னார். அப்போது தயாரிப்பாளர் ராஜ் கண்ணு, என்ன பாரதி, அவன் புதுப்பையன். இப்பதான் வந்திருக்கான் அவனை போய் கதை சொல்ல சொல்றியே என்று பதறிப் போய்விட்டார். பயப்படாதீங்க அவன் நல்லா கதை சொல்லுவான் என்று சொல்லி, நீ சொல்லுய்யா என்று என்னை இயக்குனர் ஊக்கப்படுத்தினார்.

அதன்பிறகு நான் சொன்னதைக் கேட்டு தயாரிப்பாளர் ராஜ்கண்ணு அசந்து போய்விட்டார். இந்த பையன் உண்மையிலேயே நல்லா கதை சொல்றான் என்று வெளிப்படையாக கூறினார். அப்படி ஒரு தந்தை ஸ்தானத்திலிருந்து என்னை ஊக்குவித்து எனக்கு தைரியம் கொடுத்து என்னை பேச வைத்தவர் என் மேல் நம்பிக்கை வைத்தவர் இயக்குனர். அதனால்தான் அவரது பெயரை நான் எங்கேயும் சொல்லுவதில்லை. அவர் பெயரை சொல்வதற்கு வாய் வரவில்லை என்பதுதான் உண்மை என்று இயக்குனர் கே பாக்யராஜ் அந்த நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.

சற்று முன்