நடிகர் ரஜினிகாந்த் என்றாலே ரசிகர்கள் மத்தியில் எப்போதும் மாஸ் தான். அவர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இன்றும் 73 வயதில் வலம் வருவதற்கு முக்கிய காரணம் அவர் மீது ரசிகர்கள் கொண்டுள்ள அபரிமிதமான அன்பும் மரியாதையும் தான். ரஜினிகாந்த் என்றாலே ரசிகர்கள் உற்சாகமாகி விடுகின்றனர்.
இப்போது ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. நடிகர் ரஜினிகாந்தை பொருத்தவரை அவரது படங்களில் எப்படிப்பட்ட கேரக்டரில் நடித்தாலும் அதில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுவார். ஆனால் வேட்டையன் படத்தை பொறுத்தவரை பலமுறை நடித்த போலீஸ் அதிகாரி கேரக்டரில்தான் இந்த படத்திலும் நடிக்கிறார்.
என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஆக ஏற்கனவே தர்பார் என்ற படத்தில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்து விட்டார். மற்றபடி என்கவுண்டர் தேவையா, தேவையில்லையா என்ற சப்ஜெக்ட் தான் இந்த படத்தின் மையக்கருவாக இருக்கிறது. ஜெய் பீம் இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கியுள்ள இந்த படம், நிச்சயமாக ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று மாலை சென்னை இண்டோர் ஸ்டேடியத்தில் நடந்தது. ஆனால் இந்த விழாவுக்கு வந்த சில ஆயிரம் பேர் விழா அரங்குக்குள் செல்ல முடியாமல் வெளியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதற்கு காரணம் அவர்களிடம் டிக்கெட் இருந்தும் அரங்குக்குள் அனுமதிக்கப்படவில்லை.
ஏனெனில் ஏற்கனவே அரங்கம் நிரம்பி விட்டதால் டிக்கெட்டுடன் வந்தவர்கள் அனைவரும் வெளியே தடுத்து நிறுத்தப்பட்டனர். ஒருவேளை ஏ ஆர் ரகுமான் மறக்க முடியுமா என்ற இசை நிகழ்ச்சி நடந்த போது, போலி டிக்கெட்டுகள் அதிகளவில் அச்சடித்து விற்கப்பட்டதால், இதுபோன்ற குளறுபடி ஏற்பட்டது. அதேபோல் வேட்டையன் பட இசை விழாவுக்கும் போலி டிக்கெட் அச்சடிக்கப்பட்டு இருக்கலாம் என்று ஒரு தகவல் வேகமாக பரவியது.
ஆனால் உண்மையில் அனைத்துமே ஒரிஜினல் டிக்கெட்டுகள்தான். வேட்டையன் பட விழாவுக்கு மிக அதிக எண்ணிக்கையில் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் 5000 பேர் மட்டுமே பார்வையாளராக அமர்ந்து பார்க்க முடியும் என்ற நிலையில், கூடுதலாக சில ஆயிரம் டிக்கெட்டுகளை அச்சடித்து விநியோகித்துள்ளனர். அதனால் சில மணி நேரம் முன்னால் வந்த அனைவரும் உள்ளே சென்றுவிட, விழாவுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக வந்த அனைவரும் உள்ளே செல்ல முடியவில்லை. இதில் படக்குழு சார்ந்தவர்களும் இருந்துள்ளனர். இந்த குளறுபடிக்கு லைகா நிறுவனத்தின் தவறான அணுகுமுறைதான் காரணம் என்று சர்ச்சை எழுந்துள்ளது.





