- Advertisement -
Homeபொழுதுபோக்குதன்னிடம் இருக்கும் அந்த சென்டிமென்ட் விஷயம் - நீண்ட கால ரகசியத்தை மேடையில் போட்டுடைத்த...

தன்னிடம் இருக்கும் அந்த சென்டிமென்ட் விஷயம் – நீண்ட கால ரகசியத்தை மேடையில் போட்டுடைத்த இயக்குனர் கே பாக்யராஜ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் குருவை மிஞ்சிய சீடர் என்றால் அது இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் தான். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கே பாக்யராஜ் பின்னாளில் பல வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார். இந்திய அளவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

என்னுடைய பெயரை சொல்லும் அளவுக்கு எனக்கு மிஞ்சிய ஒரு சீடனாக எதிர்காலத்தில் வருவான் என்று இயக்குனர் இமயம் பாரதிராஜா பாராட்டியது இயக்குனர் கே பாக்யராஜ் தான். தனது குருவின் அந்த ஆசையை நிறைவேற்றியவர் தான் கே பாக்யராஜ். நடிகராக இயக்குனராக கடந்த 1980 90களில் பல சூப்பர் ஹிட் படங்களை ரசிகர்களுக்கு தந்தவர்.

- Advertisement -

சமீபத்தில் தனது மனைவி பூர்ணிமாவுடன் நடிகர் மற்றும் இயக்குனர் கே பாக்யராஜ் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் மேடையில் கூறியதாவது, நான் இயக்கி நடித்த முதல் படம் சுவரில்லாத சித்திரங்கள். அந்த படம் வெளியான போது என்னுடைய முதல் மனைவி பிரவீனா. அவங்களை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி முதலில் நான் நடித்த படம்.

அந்த படம் பிரிவ்யூ பார்த்துட்டு அவங்க எனக்கு ஆர் என்று இன்ஷியல் போட்ட ஒரு மோதிரம் பரிசா கொடுத்தாங்க. அவங்க என்னை ராஜூன்னு தான் கூப்பிடுவாங்க. அப்புறம் எல்லா படங்களிலும் அந்த ஆர் மோதிரம் போட்டுட்டு தான் நடிச்சேன். அது தொடர்ந்தது. என் படங்களும் பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

அப்புறம் தாவணிக்கனவுகள் ஷூட்டிங்குல செங்கமலம் சிரிக்குது பாட்டு எடுத்த போது பைக்குல போறது ஸ்விம்மிங் ஃபூல் போனது அப்படீன்னு நடித்த போது எங்கேயோ அந்த மோதிரம் மிஸ் ஆகி விட்டது. அந்த நேரத்துல அது எனக்கு ரொம்பவும் ஃபீலிங்காக இருந்தது. சென்டிமென்டா இப்படி மிஸ் பண்ணிட்டோமேன்னு ரொம்பவும் வருத்தப்பட்டேன். அப்புறம் அதை பார்த்துட்டு பூர்ணிமா புரிஞ்சுகிட்டு எனக்கு அதே மாதிரி ஆர் மோதிரம் பரிசா கொடுத்தாங்க.

ஆனால் நான் தொலைத்த ஆர் மோதிரம் தங்கத்துல மட்டும் செஞ்சது. ஆனால் பூர்ணிமா ஆர் என்கிற மோதிரம் வைரம் எல்லாம் பதிச்சு பெருசா எனக்கு பரிசா கொடுத்தாங்க. அந்த ராசி இப்பவும் கன்டினியூ ஆகுது. அதுதான் நான் விரலில் போட்டிருக்கும் இந்த ஆர் மோதிரத்தின் ரகசியம் என்று அந்த நிகழ்ச்சியில் கே பாக்யராஜ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்