- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தில் நடித்த போது ரஜினிக்கு அது தெரியாது… ரொம்பவும் சிரமப்பட்டார் - ஓபனாக...

அந்த படத்தில் நடித்த போது ரஜினிக்கு அது தெரியாது… ரொம்பவும் சிரமப்பட்டார் – ஓபனாக பேசிய பிரபல இயக்குனர்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்பட்டு வருகிறார். கடந்த 1975ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அடியெடுத்த வைத்த அவர் கடந்தாண்டில் சினிமா பயணத்தில் தனது 50வது ஆண்டு பொன்விழாவை நிறைவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்த் நடிக்க வந்த ஆரம்பத்தில் அவருக்கு தமிழ் பேச தெரியாது. ஏனென்றால் அவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர். கன்னட மொழி மட்டுமே தெரியும் என்ற நிலையில் தமிழ் படங்களில் அவர் நடித்தார். ஆரம்பத்தில் அவர் பேசும் தமிழே புரியவில்லை என்றும் ரசிகர்களிடம் ஒரு குறை இருந்தது.

- Advertisement -

ஆனால் கே பாலசந்தர் இயக்கிய படங்களில் தொடர்ந்து நடித்த ரஜினிகாந்த் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் பேச கற்றுக்கொண்டார். அவரிடம் நீ தமிழ் கற்றுக்கொண்டால் தமிழ் சினிமாவில் முன்னுக்கு வந்துவிடலாம் என்று அறிவுரை சொன்னதே இயக்குனர் சிகரம் கே பாலசந்தர் தான். அதன்பிறகு முழுமையாக தமிழ் மொழியை கற்றுக்கொண்டார் ரஜினிகாந்த்.

ரஜினி ஆரம்ப காலத்தில் நடித்த படங்களில் அவருக்கு நல்ல வரவேற்பை அடையாளத்தை பெற்றுத் தந்த படங்களில் மிக முக்கியமானது இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே படம்தான். கமல்ஹாசன் ஸ்ரீதேவி நடித்த இந்த படத்தில் பரட்டையன் என்ற கேரட்ரில் ரஜினி வில்லனாக நடித்திருப்பார். இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்தது.

- Advertisement -

இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்தான் கே பாக்யராஜ். சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் 16 வயதினிலே படம் குறித்து கே பாக்யராஜ் கூறியதாவது, இந்த படத்தில் நடித்த போது ரஜினிக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது. அவருக்கு நான்தான் வசனங்களை சொல்லிக் கொடுப்பேன்.

அந்த வசனங்களை திரும்ப திரும்ப 8 முதல் 10 தடவை வரை என்னை சொல்லச் சொல்லி கவனமாக கேட்டுக்கொள்வார். பிறகு மரத்தடியில் நின்று அந்த வசனங்களை அவர் திரும்ப திரும்ப பேசிக்கொண்டே ஒத்திகை பார்த்துக்கொள்வார். அதன்பிறகு அவருடன் அன்புள்ள ரஜினிகாந்த் நான் சிவப்பு மனிதன் போன்ற படங்களில் நடித்தேன். முதல் தடவை நான் பார்த்த ரஜினியாகவே அவர் இப்போது வரை கற்றுக்கொள்ளும் ஒருவராகவே இருந்து வருகிறார். இதுதான் ரஜினியின் சிறப்பாக நான் பார்க்கிறேன் என்று கே பாக்யராஜ் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்