- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்கள் நினைப்பது போன்ற படம் அல்ல ரெட்ரோ, முழுக்க முழுக்க அதுதான் படத்தின் கதை -...

நீங்கள் நினைப்பது போன்ற படம் அல்ல ரெட்ரோ, முழுக்க முழுக்க அதுதான் படத்தின் கதை – உண்மையை போட்டுடைத்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!

- Advertisement -

கங்குவா படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ரெட்ரோ. வருகிற மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று இந்த படம் ரிலீஸாகிறது. படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் ஜெயராம் நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து கண்ணாடி பூவே கனிமா ஏ ஒன் என 3 பாடல்கள் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த 18ம் தேதி சென்னை இண்டோர் ஸ்டேடியத்தில் ரெட்ரோ படத்தின் இசை வெளியீடு டிரெய்லர் வெளியீடு விழா நடந்தது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற ரெட்ரோ படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறியதாவது, ரெட்ரோ முழுக்க முழுக்க ஒரு காதல் கதை. அதுதான் படத்தின் மையமாக உள்ளது. எனது முந்தைய படங்களில் கூட எப்போதும் ஒரு தனிப்பட்ட மையம் இருந்தது. பெரும்பாலும் அது உணர்வுபூர்வமாகவே இருக்கும்.

ஆனால் இந்த முறை காதல் உந்து சக்தியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் மட்டுமல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக, காதல் கதாபாத்திரத்தை பரிணமிக்க வைக்கும் ஒன்றாகவும் இருக்கும்.

- Advertisement -

சூர்யா கதாபாத்திரம் ஒரு காலத்தில் ஒரு கேங்ஸ்டர் ஆக இருந்து, தனது வன்முறை நிறைந்த கடந்த காலத்தில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறது. மேலும் அவர் காதலில் விழும்போது ஒரு உணர்வுபூர்வமான கணக்கீட்டுக்குள் இழுக்கப்படுகிறது. அமைதி எப்படி இருக்கும் என்று கூட தெரியாத ஒரு மனிதனைப் பற்றிய கதை இது.

சினிமாவில் அதிரடித்தனத்தை காட்டுவது என்பது எளிது. ஆனால் காதலை உண்மையாக உணர வைப்பது என்பது சவால். அதை பெறுவதும் கடினம் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜா அந்த நேர்காணலில் பேசி இருக்கிறார். ரெட்ரோ படம் கேங்ஸ்டர்ஸ் படம், ஆக்சன் கதை என்று பலரும் நினைத்திருந்த நிலையில் அது முழுக்க முழுக்க காதல் படம் என்று கார்த்திக் சுப்பராஜ் கூறியிருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்